இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Friday, November 28, 2014

மைத்திரியின் களமிறக்கம் டில்லியின் "உட்குத்தலா?'

லங்கை ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற உள்ளது. இத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ராஜபக்ஷவின் சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மூத்த தலைவர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுகிறார்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 13 ஆண்டுகாலம் பொதுச்செயலராக இருந்த மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஷ

Wednesday, November 26, 2014

இன்னும் விலகாத மர்மம்!

மணிவிழா கொண்டாட்டம்...
''மாவீரர்கள் ஒரு சத்திய லட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல... எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன. சத்தியத்துக்காக சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது

Tuesday, November 25, 2014

சரித்திர ரீதியாக, 3ஆவது தவணை என்பது ஆயுட்காலம்!




லகில் பலவிதப்பட்ட ஆட்சிமுறைகள் பாவனையில் உள்ளன. இவற்றில்  ஜனநாயகம், சர்வாதிகாரம், குடியாட்சி, முடியாட்சி, கம்யூனிஸம், சோஷலிஸம் என்பவை குறிப்பிடக்தக்கவை.
ஜனநாயக ஆட்சி என்னுமிடத்தில், அங்கு ஒழுங்கு தவறாத நீதித்துறை, யாவரும் நீதியின் முன் சமன், அரசாங்கம் மீதான மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு, சமத்துவம், பலரும் ஏற்றுக்கொள்ளும் சமூக பொருளாதார கட்டமைப்பு, மக்கள் ஆட்சி, பேச்சு சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் போன்றவை காணப்படும். மோசடி நிறைந்த தேர்தலை நடத்தும் பல அரசாங்கங்கள் தங்களையும் ஜனநாயக அரசாக கருதுகின்றன. தேர்தல் நடத்துவது மட்டும் ஜனநாயகம் அல்ல. தேர்தல்கள் மோசடியற்று சுதந்திரமான வாக்கெடுப்பு, வாக்குக்கள் சுதந்திரமாக எண்ணப்பட வேண்டும்.

Saturday, November 22, 2014

சோழியன் குடுமி சும்மா ஆடாது

மகிந்த அரசில் பிரதான வகி பாகம் வகித்த பிரதானிகள் சிலர் அரச
தரப்பிலிருந்து எதிரணிக்கு மாறிக்கொண்டிருக்கும் செய்திதான் நாட்டில் தற்போதைய பரபரப்பு.
இதுக்கெல்லாம் பின்னணியில் நின்று காய் நகர்த்திக்கொண்டிருக்கும் பிரதானியாக சந்திரிகா குமாரதுங்கவே உள்ளார்.

இந்தக் காய் நகர்த்தலில் இவவுக்கு என்ன லாபம்?
எதுவுமே இல்லையே! 
அப்படியானால்  இவ எதுக்கு தலைபோடுகிறா?

Friday, November 21, 2014

இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் காரணம் என்ன?

விடுதலைப் புலிகளை முற்றாகப் போரில் தோற்கடித்தன் பின்னர், சிறிலங்காவானது மிகப் பாரியளவில் நலன்களைப் பெறுகிறது. இதன்மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனாவை ஏவக்கூடிய அளவுக்குத் தனது பொருளாதாரம் மற்றும் புவியியலைக் கட்டுப்படுத்தி அவற்றில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் சிறிலங்கா இன்னமும் முன்னேற்றமடையவில்லை.

வாயை மூடிப்பேசவும்!

நோர்வேக்கு எதிரான புதிய போர் ஒன்றை மீளவும் ஆரம்பித்துவைத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

வடக்குக்கான தேசிய நெடுஞ்சாலைக்கு குருநாகலில் அடிக்கல் நாட்டிய பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதுக்காக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மீதும் முன்னாள் நோர்வே அரசாங்கம் மீதும் விசாரணைகளை நடத்த வேண்டுமென்று நோர்வே அரசாங்கத்தை அவர் கேட்டிருந்தார்.

Wednesday, November 19, 2014

ஜனாதிபதி தேர்தலும் இனவாத அரசியலும்




னாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்கனவே போட்டியிட்ட இரு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் பிரசாரங்களுக்கு கையாண்ட அணுகுமுறைகள் சிறுபான்மையினத்தவர்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை சிங்களவர்கள்  மத்தியில் தூண்டிவிடுபவையாகவே அமைந்திருந்தன.

Tuesday, November 18, 2014

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியல் பிரவேசம்?

ரஜினி- இந்த மூன்றெழுத்து தமிழகத்தில் அவ்வப்போது சுனாமி போல் மக்கள் மனதில் எழும். பிறகு அது அப்படியே எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அமுங்கிப் போகும். ஒவ்வொரு சினிமா படம் எடுக்கும் போதும் “அரசியலுக்கு வருகிறார் ரஜினி” என்ற கோஷம் கிளம்பும். பிறகு அப்படியே சப்தம் குறைந்து விடும். இதுதான் கடந்த 18 வருடங்களாக தமிழகம் கண்ட காட்சி.