இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Saturday, October 3, 2015

ஆடு நனைகிறதென்று...

சொற்கள் பொருளழியுங் காலத்தில், பொருள்கோடல் சொற்களை மேலும் பொருளற்றதாக்குகிறது. அது சொற்களின் பெறுமதியைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
மனித உரிமைகள் என்ற சொல்லாடல் இன்றைய உலக அரசியலின் திசைவழியில் வலிய சொல்லாகியிருக்கிறது. அது யாருக்கானது அல்லது யாருக்கு எதிரானது என்பது அதன் வலிமையைத் தீர்மானிக்கிறது. 
இப்போது ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளும் அதில் இலங்கையின் மீதான அக்கறையும் ஒருபுறம் கவனத்தை ஈர்க்கையில், மறுபுறம் பேரவையின் முக்கியமான குழுவுக்கான தலைமையை ஐ.நா. சவூதி அரேபியாவுக்கு வழங்கியிருப்பது கடும் விமர்சனத்துக்குட்பட்டுள்ளது.  

Thursday, October 1, 2015

ஈழத்தை நோக்கியே நகர்கிறோம் நாம்!

இந்தக் கட்டுரை வெளியாகிற தினத்தில் ஜெனிவாவில் புயலடித்து ஓய்ந்திருக்கக் கூடும்.... நீதி கிடைக்கும் என்கிற தமிழினத்தின் நம்பிக்கை சாய்ந்திருக்கக் கூடும்....! அதற்கு 24 மணி நேரத்துக்கு முன் எழுதுகிறேன் இதை!
2009ல் நடந்தது நிச்சயமாக இனப்படுகொலை -
அதை நிரூபிக்க சர்வதேச விசாரணை அவசியம் - 
இன அழிப்புக் குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது -
குற்றவாளி தன்னைத் தானே விசாரிக்க அனுமதிக்கக் கூடாது - இதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம் நாம்.

Saturday, September 12, 2015

யாருக்கு விசாரணை....! எதற்காக தயக்கம்....!

ஏதிர்பார்ப்புக்களோடு நடைபெற்ற எட்டாவது பாராளுமன்றத் தேர்தலும் கோலாகலமாக நிறைவடைந்து விட்டது. மூன்று தசாப்தத்திற்குப் பின்னர் தேசிய அரசியலில் அதியுச்ச பதவிகளில் ஒன்றான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பல்வேறு இழுபறிகளின் மத்தியில் தமிழினத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுவிட்டார்.
தென்னிலங்கையில் வரவேற்பும் கடுமையான இனவாத விமர்சனமும் மேலெழுந்துள்ள நிலையில் தமிழர் தாயகமான வட கிழக்கில் கொண்டாட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

Sunday, August 23, 2015

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சில சமூக ஊடகங்களும்

டந்த திங்கட்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தான் தோற்கடிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கான முயற்சியில், மிக முக்கியமான பாத்திரத்தை வகித்த புறக்காரணிகள் இரண்டு.
ஒன்று புலம்பெயர் தமிழர்கள். இரண்டாவது சமூக ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதி.

Sunday, August 9, 2015

இலங்கையின் தேர்தலை சூழ்ந்துள்ள இனவாத அரசியல்!

இலங்கையில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் மாத்திரமே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதோடு, ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கு எதிரானவர்களால் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனத்தை விமர்சனம் செய்வதையே தமது தேர்தல் பரப்புரையாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அதுவும் தமிழர் கூட்டமைப்பு தங்கள் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதோடு தெற்கில் சிங்களக் கட்சிகளின் பார்வை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பக்கமே திரும்பியிருக்கிறது.
புலிகள் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது, மீண்டும் பிரிவினை கோரிக்கையையே முன்வைக்கிறார்கள் என்ற குரல் அனேகமாக எல்லா மேடைகளிலும் எதிரொலிக்கிறது எனலாம்.

Thursday, August 6, 2015

ஆகஸ்ட் 17: தீர்ப்பு நாள்! ஒளிமயமா... இருள்யுகமா...!

வினைவிதைத்தவன் வினையறுப்பான் தினைவிதைத்தவன் தினையறுப்பான் என்ற முதுமொழியின் தெளிவை நாம் பிரயோக ரீதியில் புரிந்துகொள்வதற்கு இன்னும் இருப்பது இருவாரங்கள் மட்டுமே.
நாட்டுக்கு உயிர் ஊட்டுவதா? அல்லது புதிய தேசத்தை உருவாக்குவதா? என்ற இருபெரும் சவால்களுக்கு மத்தியில் அவற்றிற்கு தீர்ப்பை வழங்கவுள்ள ஏறக்குறைய 1 கோடி 50 இலட்சம் வாக்காளர்களில் எத்தனை இலட்சம் வாக்காளர்கள் எந்த தீர்மானத்தில்

Thursday, July 16, 2015

விக்னேஸ்வரன் தான் திருப்புமுனை!

பதவி நாற்காலியில் பிசின், பெவிகால் எல்லாம் போட்டு பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ள முயலும் தலைவர்களையே பார்த்துப் பார்த்து வெறுத்துப்போனவர்கள் நாம். 'எல்லாம் நம்முடைய தலைவிதி' என்று நம்மை நாமே சலித்துக் கொள்வதிலும் நம்மை அடிக்க ஆளே இல்லை.இந்த சொந்த சோகத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத்தான் ஈழத்தைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்ப்பவர்கள்தான், விக்னேஸ்வரன் என்கிற மக்கள் தலைவனின் உயரத்தை உணர முடியும். 
பதவி - நாற்காலி என்கிற கவலையெல்லாம் இல்லாமல், துண்டை உதறித் தோளில் போட்டபடி உண்மையைப் புட்டுப் புட்டு வைத்து விடுகிறார் விக்னேஸ்வரன். அதைப் பார்த்துத்தான் பயப்படுகிறது இலங்கை.

Tuesday, July 14, 2015

பேரரசரின் மீள் வருகை

கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும்,

Monday, June 15, 2015

யாருக்கு ஆப்பு வைக்க முனைகிறார் ரணில்?

கடந்த திங்கட்கிழமை மாலை அவசரமாக கூட்டப்பட்ட அமைச்சரவை, தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்த யோசனைக்கு அங்கிகாரத்தை அளித்திருக்கிறது. ஆனால், பலரும் நினைப்பதுபோன்று, இது வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்குமான இறுதியான வரைவு அல்ல. இது ஒரு யோசனை மட்டுமே. 20ஆவது திருத்தச்சட்டம்

Sunday, May 24, 2015

பூகோள அரசியலில் தமிழர்கள்!

பூகோள அரசியலை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணப்பாடு அரசியல் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பித்த காலம் தொட்டு இருந்து வருகின்றது. ஆனால், பூகோள அரசியலில் பிரதான கருவிகளில் ஒன்றாக கையாளப்பட்டு வந்துள்ள தமிழ் மக்கள், கருவி நிலையிலிருந்து அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கான முயற்சிகளை பெருமளவில் மேற்கொண்டதில்லை. அல்லது, அப்படியான முயற்சிகளை பிராந்திய வல்லரசு உள்ளிட்ட பூகோள அரசியலை தீர்மானிக்கும் சக்திகள் அனுமதித்தது இல்லை.   தமிழ் மக்களின் அரசியல்

Wednesday, May 20, 2015

மாணவி வித்தியா படுகொலை! வரலாற்றுத் துயரமா? - திருப்பமா?

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது முக்கியமானதொரு மக்கள் எழுச்சிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
போருக்குப் பின்னர், வடக்கு, கிழக்கின் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவுகள், தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், கவலையாகவும் மாறியிருந்தன. இத்தகைய சூழலில் தான் இந்தச் சம்பவம் புதியதொரு திருப்பமாக மாறியிருக்கிறது.

Saturday, May 16, 2015

தீர்ப்பில் திருத்தம்: குமாரசாமியை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்ததால் பரபரப்பு!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்த தீர்ப்பை திருத்துவதற்காக அணுகிய நீதிபதி குமாரசாமியை சந்திக்க, கர்நாடக தலைமை நீதிபதி  அனுமதி மறுத்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி கடந்த 11ஆம் தேதி விடுதலை செய்தார். இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் தீர்ப்பில் பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Monday, February 23, 2015

அறிக்கை தாமதம்: என்ன பயன்?

மிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தாமதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் அப்பேரவையிடம் விடுத்த கோரிக்கையை பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் பெற்ற மாபெரும்

Thursday, February 19, 2015

ஐ.நா.வும் தமிழர்களுக்கான நீதியும்

மிழ் மக்கள் காலம் காலமாக தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக நீதி வேண்டி காத்திருக்கின்றார்கள்.  நீதி வேண்டிக் காத்திருத்தல் என்பது  அதிகம் நம்பிக்கைகளினால் நிறைந்தது. ஆனால்,  அந்த நம்பிக்கைகள் பொய்த்து காத்திருத்தல் கொடும் கனவாக மாறிய வரலாறுகளே தமிழ் மக்களுக்கு மிஞ்சியிருக்கின்றன. அப்படியான தருணமொன்றை நோக்கியே தமிழ் மக்கள் நகர்த்தப்படுகின்றார்கள். இப்போது நம்பிக்கையின் அளவு அவ்வளவு அதிகமாக இல்லாததால் ஏமாற்றத்தின் அளவு அவ்வளவுக்கு பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.

Saturday, February 7, 2015

இலங்கையை காப்பாற்றுமா அமெரிக்கா?

ட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, இலங்கை அரசிடமிருந்து விலகி நின்ற நாடுகள் நெருங்கிவரத் தொடங்கியுள்ளதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளன. கடந்த வாரமும் இந்த வாரமும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கொழும்புக்கு வந்திருந்ததால், பரபரப்பான நிலை காணப்பட்டது.

Friday, February 6, 2015

ஆட்சியில் மாற்றம் வந்தாலும், தேசிய மனச்சாட்சியில் மாற்றம் வேண்டும்!



லங்கையின் 67 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் கடந்த புதன் அன்று அரச தரப்பால் கொண்டாடப்பட்டது. ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் அதிகம் இன்றி அமைதியாகவும், எழிமையாகவும் நிறைவேறியிருந்தது. 
கடந்த வருட கொண்டாட்டங்களோடு ஒப்பிடுகையில், படைத்தரப்புக்கான முக்கியத்துவமும், அணிவகுப்புகளும் மட்டுப்படுத்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

Friday, January 30, 2015

மஹிந்தவின் எதிர்காலம்?

ண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்ததை அடுத்து, அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி இப்போது முக்கிய விவகாரமாக மாறியுள்ளது. கடந்த 8ஆம் திகதி

Thursday, January 29, 2015

கிழக்கு முதலமைச்சர் இழுபறி!

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் யார்?, என்பது தொடர்பிலான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை. தமிழ் பேசும் மக்களின் இரு பிரதான கட்சிகளும் விட்டுக் கொடுப்பின்றி தன் பக்க நியாயங்களோடு
அடம்பிடிக்கின்றன. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனநாயக

Sunday, January 25, 2015

ஊழல் பேர்வழிகள், வெள்ளை வான்காரர்கள் தண்டிக்கப்படுவார்களா?

டந்த 9ஆம் திகதி பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ததைப் போல், இதற்கு முன்னர் பதவிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதியோ எந்தவொரு அரசாங்கமோ குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட விடயங்களை செய்வேன் என்று நாட்குறிப்பொன்றை முன்வைத்ததில்லை. தமது அரசாங்கம், அடிப்படையில்

Monday, January 19, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில்; சுகாதார அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேன தாம் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த நவம்பர் 21ஆம் திகதி அறிவித்த பின்னர் மறுநாள் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜபக்ஷ, அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர், வெளிநாட்டு

Saturday, January 17, 2015

விடைதேடுமா தமிழ் தலைமை!

மிழ்மக்கள்தான் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். வாக்களிப்பு விபரங்களை ஆய்வு செய்யும் எவரும் இதைத் தெளிவாகப்புரிந்து கொள்வார்கள்.
8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தைலின் மொத்த வாக்குகளின் விபரங்களின் முடிவுகளை பார்த்தால்
மைத்திரிபால சிறிசேன- 6217162 ,
மகிந்த ராஜபக்ஷ - 5768090,
வடகிழக்கில் மைத்திரிபால சிறிசேன- 978111 ,
வடகிழக்கில் மகிந்த ராஜபக்ஷ - 323600 ,
அவ்வாறே சிங்கள மாவட்டங்களில்
மைத்திரிபால சிறிசேன - 5239051 ,
சிங்கள மாவட்டங்களில்
மகிந்த ராஜபக்ஷ -5444490,

Friday, January 16, 2015

மஹிந்தவை தோற்கடித்தது யார்?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈட்டப்பட்ட வெற்றிக்கு பலரும் உரிமை கோரி வருவதைப்போலவே, நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் தாமே மூல காரணமென்று பலரும் உரிமை கோரி வருகின்றனர். தமிழர்களும்
முஸ்லிம்களும் இந்தத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருந்தனர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இங்கு தமிழர்கள் என்று கூறுவது, வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலுமுள்ள தமிழர்களையே சுட்டிநிற்கிறது. முஸ்லிம்கள்

அமெரிக்கா பின்வாங்க...இந்தியா அமைதி காக்க... இனி என்ன ஆவான் ஈழத் தமிழன்?

லரி மாளிகையில் இருந்து அலறியடித்து ஓடிவிட்டார் மகிந்த ராஜபக்ஷே! அவர் 'பிஸ்கட்’ போட்டு வளர்த்த இராணுவமும் காப்பாற்றவில்லை; ஊர் ஊராகப் போய் பிராயச்சித்தம் தேடிய கடவுளும் காப்பாற்றவில்லை.
'திருப்பதி வந்தால் திருப்பம் நேரும்’ என்பார்கள். திருப்பதி வந்து போனவருக்கு நேர்ந்த திருப்பமோ, திடுக்கிட வைத்தது.

Thursday, January 15, 2015

தீர்க்க தரிசனத்துடன் செயற்பட வேண்டிய தருணம்!

"கொடிது, கொடிது வறுமை கொடிது, அதினிலும் கொடுமை இளமையில் வறுமை' என்பது மூதறிஞர்களின் பட்டறிவு ஞானம். சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் தொடர்பாக இந்த வருடம் இடம்பெறவுள்ள முக்கியமான  இரு உச்சி மாநாடுகளின் போது உலகத் தலைவர்கள் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்காது போனால்  100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மோசமான வறுமையால் வாடுவார்களென நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் "நடவடிக்கை /2015' என்ற இயக்கம் எச்சரித்திருப்பதைக் காணமுடிகிறது.

Monday, January 12, 2015

பாஞ்சாலி சபதம் ஜெயித்தது! மஹிந்த சாம்ராஜ்யம் சரிந்தது

லகின் ஒட்டு மொத்த கவனத்தையும் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளின் நேரடிப் பார்வையின் கீழ் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியிலும் வாழ்வா, சாவா என்ற போராட்டத்திற்கும் மத்தியிலும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
ஆனாலும் நாட்டில் ஆட்சி மாற்றமா? இராணுவ ஆட்சியா? போன்ற பதற்றம் அதிகரித்தே காணப்பட்டது.

Friday, January 2, 2015

ஆப்கானிஸ்தான் தயாரா?

ப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் "சர்வதேசப் பாதுகாப்பு உதவிப் படை' தனது 13 ஆண்டு காலப் பணியை முறைப்படி நிறைவு செய்துள்ளதன் மூலம், ஆப்கானிஸ்தான் இனி சுயமாகவே தலிபான்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்பைத் தனியாக உறுதி செய்யும் அளவுக்கு ஆப்கன் ராணுவம் தயாராகியுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2001, செப்டம்பர் 11 அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனையும், தலிபான்

"அடிமைத்தன நன்மைகளுக்காக எம்மக்கள் போராடவில்லை'

மது நாட்டின் அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு அலகே எமது வட மாகாண சபை. 1987 ஆம் ஆண்டில் இலங்கை  இந்திய உடன்படிக்கையின் விளைவாக வெளியானதே இந்த 13 ஆவது திருத்தச் சட்டம். தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகுப்பதாகக் கூறியே இந்தத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  எங்கே அந்தச் சட்டத்தை தமிழ்ப் பேசும் மக்கள் சார்பாகக் கொண்டு வந்தால் சிங்கள மக்கள் தன்னைத் துரோகியாகக் கணிப்பார்களோ என்ற பயத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன நாடு

Thursday, January 1, 2015

கூட்டமைப்பின் முடிவு!

ரகசியமாகவோ, பின்கதவு வழியாகச் சென்றோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அவ்வாறானதொரு தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயாரில்லை. இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இடம்பெறும் பேச்சுகளும் பெறப்போகும் தீர்வும் வெளிப்படையானவையாக இருக்கவேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.' இரா.சம்பந்தன் (டிசெம்பர் 30, 2014