இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Sunday, August 9, 2015

இலங்கையின் தேர்தலை சூழ்ந்துள்ள இனவாத அரசியல்!

இலங்கையில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் மாத்திரமே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதோடு, ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கு எதிரானவர்களால் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனத்தை விமர்சனம் செய்வதையே தமது தேர்தல் பரப்புரையாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அதுவும் தமிழர் கூட்டமைப்பு தங்கள் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதோடு தெற்கில் சிங்களக் கட்சிகளின் பார்வை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பக்கமே திரும்பியிருக்கிறது.
புலிகள் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது, மீண்டும் பிரிவினை கோரிக்கையையே முன்வைக்கிறார்கள் என்ற குரல் அனேகமாக எல்லா மேடைகளிலும் எதிரொலிக்கிறது எனலாம்.

Thursday, August 6, 2015

ஆகஸ்ட் 17: தீர்ப்பு நாள்! ஒளிமயமா... இருள்யுகமா...!

வினைவிதைத்தவன் வினையறுப்பான் தினைவிதைத்தவன் தினையறுப்பான் என்ற முதுமொழியின் தெளிவை நாம் பிரயோக ரீதியில் புரிந்துகொள்வதற்கு இன்னும் இருப்பது இருவாரங்கள் மட்டுமே.
நாட்டுக்கு உயிர் ஊட்டுவதா? அல்லது புதிய தேசத்தை உருவாக்குவதா? என்ற இருபெரும் சவால்களுக்கு மத்தியில் அவற்றிற்கு தீர்ப்பை வழங்கவுள்ள ஏறக்குறைய 1 கோடி 50 இலட்சம் வாக்காளர்களில் எத்தனை இலட்சம் வாக்காளர்கள் எந்த தீர்மானத்தில்

Thursday, July 16, 2015

விக்னேஸ்வரன் தான் திருப்புமுனை!

பதவி நாற்காலியில் பிசின், பெவிகால் எல்லாம் போட்டு பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ள முயலும் தலைவர்களையே பார்த்துப் பார்த்து வெறுத்துப்போனவர்கள் நாம். 'எல்லாம் நம்முடைய தலைவிதி' என்று நம்மை நாமே சலித்துக் கொள்வதிலும் நம்மை அடிக்க ஆளே இல்லை.இந்த சொந்த சோகத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத்தான் ஈழத்தைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்ப்பவர்கள்தான், விக்னேஸ்வரன் என்கிற மக்கள் தலைவனின் உயரத்தை உணர முடியும். 
பதவி - நாற்காலி என்கிற கவலையெல்லாம் இல்லாமல், துண்டை உதறித் தோளில் போட்டபடி உண்மையைப் புட்டுப் புட்டு வைத்து விடுகிறார் விக்னேஸ்வரன். அதைப் பார்த்துத்தான் பயப்படுகிறது இலங்கை.

Tuesday, July 14, 2015

பேரரசரின் மீள் வருகை

கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும்,

Monday, June 15, 2015

யாருக்கு ஆப்பு வைக்க முனைகிறார் ரணில்?

கடந்த திங்கட்கிழமை மாலை அவசரமாக கூட்டப்பட்ட அமைச்சரவை, தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்த யோசனைக்கு அங்கிகாரத்தை அளித்திருக்கிறது. ஆனால், பலரும் நினைப்பதுபோன்று, இது வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்குமான இறுதியான வரைவு அல்ல. இது ஒரு யோசனை மட்டுமே. 20ஆவது திருத்தச்சட்டம்

Sunday, May 24, 2015

பூகோள அரசியலில் தமிழர்கள்!

பூகோள அரசியலை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணப்பாடு அரசியல் உரிமைப் போராட்டங்கள் ஆரம்பித்த காலம் தொட்டு இருந்து வருகின்றது. ஆனால், பூகோள அரசியலில் பிரதான கருவிகளில் ஒன்றாக கையாளப்பட்டு வந்துள்ள தமிழ் மக்கள், கருவி நிலையிலிருந்து அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கான முயற்சிகளை பெருமளவில் மேற்கொண்டதில்லை. அல்லது, அப்படியான முயற்சிகளை பிராந்திய வல்லரசு உள்ளிட்ட பூகோள அரசியலை தீர்மானிக்கும் சக்திகள் அனுமதித்தது இல்லை.   தமிழ் மக்களின் அரசியல்

Wednesday, May 20, 2015

மாணவி வித்தியா படுகொலை! வரலாற்றுத் துயரமா? - திருப்பமா?

புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது முக்கியமானதொரு மக்கள் எழுச்சிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
போருக்குப் பின்னர், வடக்கு, கிழக்கின் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவுகள், தமிழ்ச் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், கவலையாகவும் மாறியிருந்தன. இத்தகைய சூழலில் தான் இந்தச் சம்பவம் புதியதொரு திருப்பமாக மாறியிருக்கிறது.

Saturday, May 16, 2015

தீர்ப்பில் திருத்தம்: குமாரசாமியை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்ததால் பரபரப்பு!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்த தீர்ப்பை திருத்துவதற்காக அணுகிய நீதிபதி குமாரசாமியை சந்திக்க, கர்நாடக தலைமை நீதிபதி  அனுமதி மறுத்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி கடந்த 11ஆம் தேதி விடுதலை செய்தார். இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் தீர்ப்பில் பிழை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.