பெரு நிலப்பரப்புக்கு தனது கட்சியை வாக்கெடுக்கக் களமிறக்கி துரத்தியடிக்கப்பட்ட இவர், ‘ஜெ’ விவகாரத்தைக் கையிலெடுத்து தனது மூக்கை உடைத்துக்கொண்டுள்ளார். தமிழகத்திலுள்ள வழக்கறிஞர் ஒருவரைத் தொடர்புகொண்டு, அவரிடம் தனது பாண்டித்தியத்தை கேள்விகளில் காட்டப் போய் தடுமாறிவிட்டார் அவர் கொடுத்த பதில்களால்.
மூக்குடைபட்டது தான் என்பதை மறைக்க ‘பழ மொழி’ விவகாரத்தைக் கேட்டது அவருக்குக் கோபத்தை உண்டுபண்ணிவிட்டது என நக்கலாகச் சிரித்துத் தன்னை மேலும் சிறுமைப்படுத்திவிட்டார்.
அதுமாத்திரமின்றி தினமும் குரல் கொடுத்து வரும் கடதாசியின் (பேப்பர்) ஞாயிறு வரவின் ‘ஜெ’ குறித்த பிரதான செய்தி குறித்து கிண்ணடல் அடித்துள்ளார். இதற்கு அந்த இதழில், இவர் சம்பளத்துக்காக வேலை பார்க்கும் நிறுவனத்தின் அலைவரிசை நிகழ்ச்சி ஒன்று குறித்து வாசகர் ஒருவரின் கருத்துப் பதிவாயியிருந்தமை காரணமாக இருந்திருக்கலாம்.
No comments:
Post a Comment