இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Saturday, November 22, 2014

சோழியன் குடுமி சும்மா ஆடாது

மகிந்த அரசில் பிரதான வகி பாகம் வகித்த பிரதானிகள் சிலர் அரச
தரப்பிலிருந்து எதிரணிக்கு மாறிக்கொண்டிருக்கும் செய்திதான் நாட்டில் தற்போதைய பரபரப்பு.
இதுக்கெல்லாம் பின்னணியில் நின்று காய் நகர்த்திக்கொண்டிருக்கும் பிரதானியாக சந்திரிகா குமாரதுங்கவே உள்ளார்.

இந்தக் காய் நகர்த்தலில் இவவுக்கு என்ன லாபம்?
எதுவுமே இல்லையே! 
அப்படியானால்  இவ எதுக்கு தலைபோடுகிறா?

ஒருவேளை, 2004ஆம் ஆண்டு ஜனாதிபதியானவுடன் மகிந்த தன்னை வெட்டிவிட்டதற்குப் பழி வாங்க முனைகிறாரோ.
இதுதான் பொதுஜனங்களில் கருத்து.

ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் அந்தக் கதிரை சும்மா ஆடிக்கொண்டிருப்பதாகத்தான் இருக்கும்.
பின்னர் பிரதமர் பதவிதான் பலமாக இருக்கும்.

ஆகவே அடுத்த பிரதமராக வேண்டும். சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.
இதுதான் சந்திரிக்காவின் ‘மாஸ்டர் பிளான்’

அதாவது, வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அரச தரப்பிலிருந்து பிரதானி ஒருவரை இழுப்பது.
அவருடன் அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அரச அதிருப்தியாளர்களை எதிரணிக்கு அழைத்து மகிந்தவின் வாக்கு வங்கியை உடைத்து, எதிரணி வேட்பாளரை ஜனாதிபதியாக்குவது. பின்னர் அவர் 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார்.
இப்போது ஜனாதிபதி வெறும் பொம்மை.

அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வரும்
இதன்போது தற்போதைய அரச தரப்பினர்கள் - முன்னாள் சந்திரிகா விசுவாசிகள் அனைவரையும் தன்வசம் இழுத்து சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றி, ரணிலுக்கு எதிராக பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குவது.
பின்னர் என்ன வெற்றிக்கனவுதான்.
பிரதமர்
சுதந்திரக் கட்சித் தலைவி
இந்த இரண்டும் கைக்கு வந்துவிடும்
மீண்டும் பண்டாரநாயக்க பரம்பரைதான்.
இதுதான் சந்திரிகாவின் ‘மாஸ்டர் பிளான்’
சும்மாவா சொல்லுவார்கள் ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்று......

No comments:

Post a Comment