ராஜேந்திரசோழனின் ஆயிரமாவது முடிசூடிய ஆண்டு விழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தமிழகத்தின் 36 இடங்களில் அணிவகுப்புகளை நடத்தி, தமிழக மக்களை தங்கள் பக்கமும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள்.
இவ்அணிவகுப்பை ஆர்.எஸ்.எஸ். மொழியில், பத சஞ்சலன் என்றும் ஆங்கிலத்தில் Route march என்றும் கூறுவார்கள்.
மத்தியில் ஆட்சிபுரியும் பா.ஜ.க.வின் தாய் அமைப்பான இந்த ஆர்.எஸ்.எஸ். (ராஸ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்), தமிழகத்தில், இதுபோல இதற்கு முன்பு ஆக்ரோஷமாக களத்தில் இறங்கியதில்லை.
வழக்கமாக இம்மாநிலத்தில், விநாயகர் சதுர்த்தியின் போது இந்து முன்னணி அமைப்புதான் ஊர்வலங்களை பிரமாண்டமாக நடத்தி, தங்கள் அமைப்பு இருப்பதை அரங்கேற்றிக் கொள்ளும். ஆனால், இந்த முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அப்படியொரு பிரமாண்டமான அணிவகுப்புகளை தமிழகம் முழுவதும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடத்தி முடித்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்றாலே அதன் தொண்டர்கள் காக்கி அரைக்காற்சட்டை, வெள்ளை நிறத்தில் முழுக்கை சட்டை அணிந்து அதை முஷ்டியை உயர்த்துவது போல் மடித்து விட்டு, கறுப்புத் தொப்பி அணிந்து காணப்படுவார்கள்.
இப்படி சீருடையில் வருவதற்கு ஆர்.எஸ். எஸ். மொழியில்,
பூர்ண கணவேஷ் என்று கூறுவார்கள். எங்கு அமர்ந்தாலும் அணி வகுத்தாலும் ஒரு சீரான அணிவகுப்பாகவும் ஒழுங்கான வரிசையில் பேரணியாகவும் அது அமையும்.
திராவிட கட்சிகள், மாநாடுகள் போட்டும் பேரணிகள் நடத்தியும் மக்களின் ஆதரவைத் திரட்டியிருக்கின்ற இந்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மட்டுமே அணிவகுப்பு என்ற வடிவில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியான நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் நடத்தி முடித்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னணி உண்டு. ஒக்டோபர் மூன்றாம் திகதி விஜயதசமி விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் ராவ் பகவத் தமிழக நிலைமைகளை வழக்கத்துக்;கு மாறாக சுட்டிக்காட்டினார்.
வருடா வருடம் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடக்கும் இந்த விஜயதசமி உரை என்பது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள ஸ்வயம்சேவக்குகளுக்கு (தொண்டர்கள்) ஒரு கொள்கை விளக்கக் குறிப்பு போன்றதாகும்.
அந்த வருடத்தில் இடம்பெறும் பேச்சில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் என்ன குறிப்பிட்டுள்ளாரோ அதுதான் தொண்டர்களுக்கான செய்தி. அதை சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அவர்கள் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்ற வேண்டும். அதற்கான செயற்றிட்டங்களை உருவாக்க வேண்டும்.
இந்த விஜயதசமி உரையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத், தமிழகத்தின் மீது கவனம் செலுத்தியிருக்கிறார். அவரது பேச்சில் தமிழகத்திலும் கேரளத்திலும் ஜிஹாத் தீவிரவாதம் குறையவில்லை. அந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் தெரியவில்லை.
தமிழகத்திலிருந்து தாதுமணல் கடத்தப்படுவதும் குறையவில்லை என்று தமிழக நிலவரங்களை மிகவும் விரிவாக கூறியிருக்கிறார்.
இது மாதிரி சுட்டிக்காட்டி விட்டு, இந்த வருடம் ராஜேந்திரசோழனின் முடிசூட்டும் விழாவின் ஆயிரமாவது வருடம் என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார். ராஜேந்திர சோழன், தமிழர்களின் பெருமையாகவும் கௌரவமாகவும் அடையாளமாகவும் திகழ்ந்தவர். அந்த மன்னனின் பெயரை முன் வைத்து தமிழகத்துக்குள் தன் கவனத்தைத் திருப்பும் முயற்சிக்கு விதை போட்டதுதான் நாக்பூரில் நடைபெற்ற விஜய தசமி விழா.
இதைத்தொடர்ந்து, நவம்பர் 9ஆம் திகதி ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கும் பொருட்டு ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் தங்களது சீருடையில் தமிழகம் முழுவதும் 36 இடங்களில் அணிவகுப்பு நடத்தினார்கள்.
பொதுவாக தமிழகத்தில் வருடப்பிறப்பு போன்ற நேரங்களில் இது மாதிரி நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஆனால், இந்த முறை ராஜேந்திரசோழனை கையில் எடுத்துக் கொண்டனர். இந்த அணிவகுப்புக்;கு மாநில அரசு தடை விதித்தது.
அதாவது, தொண்டர்கள், தண்டா (தடி) எடுத்துக் கொண்டு போவார்கள். அது மாநில அமைதிக்கு சரிவராது என்பது பொலிஸார் அதற்கு தெரிவித்த காரணம். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்புக்கு அனுமதி பெற்றனர்.
அதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், பால ஸ்வயம் சேவக்கிலிருந்து (குழந்தை பருவ ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்) மூத்த ஸ்வயம் சேவக்குகள் வரை அனைவரும் இதில், ஒரு குடும்ப விழா போன்ற கலந்து கொண்டார்கள்.
இதில் கலந்து கொண்ட பேசிய வித்யா பாரதி அமைப்பின் மாநில செயலாளர் விஸ்வநாதன், ராஜேந்திரசோழனின் 17 சிறப்பம்சங்களை பட்டியலிட்டார்.
அவருக்கு கங்கை கொண்ட சோழன் என்று பெயர் உண்டு என்றும் இமயம் வரை நல்லாட்சி நடத்தியவர் என்றும் அவர் கட்டிய சிவாலயங்கள்தான் இன்றைக்கும் பிரமாண்டமாக இருக்கின்றன என்றும் பல சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டார்.
அதை விட முதலில் கப்பல்படை துவங்கிய முதல் தமிழன் ராஜேந்திரசோழன் என்று தமிழர் பெருமை பற்றி அங்கே விலாவாரியாக எடுத்துரைத்தார்.
அவர் பேச்சு முடிந்த பிறகு அனைவரும் அணிவகுப்புக்;கு தயாரானார்கள். முதலில் தண்டா கொண்டு செல்லக்கூடாது என்று தடை விதித்தது பொலிஸ்;. பிறகு வாத்தியங்கள் மூலம் பாடல்கள் பாடக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது. அதற்கு எல்லாம் சம்மதித்தனர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.
இறுதியில் அணிவகுப்பே போகக் கூடாது என்றனர். அதற்கு மறுத்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், நாங்கள் அமைதியாக அணிவகுப்பு புறப்படுவோம். தடையை மீறுவோம். கைது ஆவோம், என்று பிரகடனப்படுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து அணிவகுப்பு ஆரம்பமானது. கைது செய்யப்பட்டார்கள். இந்தக் கைதை பா.ஜ.க.வின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராம் மாதவ் கண்டித்திருக்கிறார். மாநிலத்தில் உள்ள பா.ஜ.க.வினரும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் கண்டனம் செய்திருக்கிறார்கள். விரைவில் இது தொடர்பாக தனியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.
இதெல்லாம் ஒரு புறமிருக்க ஆர்.எஸ்.எஸ். ராஜேந்திரசோழனின் நல்லாட்சி பிரசாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்துச் செல்வதில் அர்த்தம் பொதிந்துள்ளது.
மாநிலத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி ஏறக்குறைய பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பு தொண்டர்களுக்கு வருத்தம் அளிக்காத வாக்கு வங்கி.
அக்கட்சி தலைமையும் தி.மு.க. போல், அதிரடி இந்துத்துவா எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடிப்பதில்லை. குறிப்பாக மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தது, திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் கொண்டு வந்தது போன்றவற்றை பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் பாராட்டியே வந்திருக்கின்றன.
ஆனால் இதற்கெல்லாம் மாறாக இந்த முறை ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. இந்துத்துவா எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடிக்கவில்லை என்றாலும் சிறுபான்மையின சமுதாய வாக்குகளை பகைத்துக் கொள்ளும் எந்த முயற்சியிலும் இறங்கவில்லை.
அது துப்பாக்கி, விஸ்வரூபம் படப் பிரச்சினைகளில் கூட எதிரொலித்தது. அதை விட வழக்கத்துக்கு மாறாக அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அ.தி.மு.க. அரசு கைது செய்துள்ளது என்றாலும் அ.தி.மு.க. ஆட்சியிலிருக்கும் போது நடைபெற்ற இந்தக் கொலைகள் ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கத் தலைவர்களை கொந்தளிக்க வைத்தது.
அதன் வெளிப்பாடுதான் ஒக்டோபரில் நடந்த விஜயதசமி உரையில், தமிழகத்தில் ஜிகாத் நடவடிக்கைகள் குறையவில்லை. கட்டுப்படுத்தப்படவும் போதிய நடவடிக்கைகள் இல்லை என்பது டாக்டர் மோகன்ராவ் பகத்தின் குற்றச்சாட்டு.
இது போன்ற சூழ்நிலையில், இனி அ.தி.மு.க.வை நம்பி தமிழகத்தில் நாம் அரசியல் செய்ய முடியாது என்ற முடிவுக்கு பா.ஜ.க.வும் வந்திருக்கிறது.
அதை விட முக்கியமாக ஆர்.எஸ். எஸ். முடிவு செய்திருக்கிறது. அதனால்தான் பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றுள்ள சூழ்நிலையில், 2-ஜி அலைக்கற்றை வழக்கின் இறுதி வாதம் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தொடங்கும் நேரத்தில், தமிழகத்தில் ராஜேந்திரசோழனின் நல்லாட்சியை முன்னிலைப்படுத்தி ஆர்.எஸ்.எஸ். களமிறங்கியுள்ளது.
இந்த இயக்கத்தின் பிரசாரம் என்பது சக்திமிக்கது என்பதுதான் அனைவரது கருத்தும். குறிப்பாக நரேந்திரமோடி இன்றைக்கு பிரதமராகியிருக்கிறார் என்றால் அதற்கு முழு முதற் காரணம் ஆர்.எஸ். எஸ். தான்.
அந்த அமைப்பின் தொண்டர்கள் நாடுமுழுவதும் காங்கிரஸ் அரசின் நிர்வாக சீர்கேடுகள் பற்றியும் அந்த அரசு நீடித்தால் நாட்டுக்கு எப்படி ஆபத்து என்பது பற்றியும் செய்த தீவிர பிரசாரம்தான் மோடியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
அதேபோல, இப்போது அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து, அந்த ஆட்சியில் தங்களுக்கு அணிவகுப்பு மறுக்கப்பட்டமை குறித்து, பிரசாரத்தை அதிவேகமாக எடுத்துச் செல்லப் போகிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசியலுக்கு மாற்றாக முதலில் காங்கிரஸ் இருந்தது. பிறகு வைகோ மற்றும் ராமதாஸ் போன்றவர்கள் உருவானார்கள். அவர்களுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் பிறந்தது. அதுவும் முடியாத சூழலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. பிறந்தது.
அதுவும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுள்ள நிலையில், தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மாற்று என்பதை முன்னிறுத்தி ஆர்.எஸ்.எஸ்., தமிழகத்தில் பலமாக கால் ஊன்றுகிறது.
அணிவகுப்புக்கு அசத்தலாக வந்திருந்த தொண்டர்களைப் பார்த்தால் அதுதான் தோன்றுகிறது. இவர்களது பிரசாரம், பா.ஜ.க.வுக்கு,
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் மாற்று என்ற அந்தஸ்தை பெற்றுத் தருமா என்பது 2-ஜியில் வரப்போகும் தீர்ப்பு, பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு தண்டனையின் மீதான மேல்முறையீட்டு மனுத் தீர்ப்பு போன்றவை முடிவு செய்யும் என்பதே இன்றைய நிலைமை.
எம்.காசிநாதன்

No comments:
Post a Comment