வட மாகாண சபையின் கடந்த கூட்டத்தில் சபை சரியாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை மாகாண சபையின் பிரதித் தவிசாளர் முன்வைத்துக் காரசாரமாகப் பேசியிருக்கின்றார். சில மாவட்டங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றன என்பதும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மாகாண சபை நிறைவேற்றவில்லை என்பதும் அவர் முன்வைத்த பிரதான குற்றச்சாட்டுகள். இக் குற்றச்சாட்டுகளுக்கு மாகாண சபை நிர்வாகம் நேரடியாக எந்தப் பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தாத போதிலும் மாகாண சபைக்கு நெருக்கமானவர்களிடமிருந்தும் மாகாண சபை நிர்வாகத்தின் ஆதரவாளர்களிடமிருந்தும் சில பிரதிபலிப்புகள் வெளிவந்தன. தமிழ் மக்கள் மத்தியில் பிராந்திய வேறுபாட்டை வளர்ப்பதற்கு
வெளியிலிருந்து தூண்டப்படும் முயற்சி என்று ஒரு பிரதிபலிப்பு. குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர் விலைபோய்விட்டார் என்று இன்னொரு பிரதிபலிப்பு.

குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதுதான் சரியான நடைமுறை. மாகாண சபை உரிய முறையில் செயற்படவில்லை என்று மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதே கருத்தைத் தெரிவிக்கின்றார்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அவர்கள் அதிருப்தி தெரிவித்தார்கள்.
மாகாண சபை செயற்படாமலிருப்பதற்கு முதலமைச்சரும் மற்றவர்களும் காலத்துக்குக் காலம் சில காரணங்களைக் கூறுகின்றனர். மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை என்பது இப்போது
சொல்லும் காரணம். பதின்மூன்றாவது திருத்தம் மாகாண சபைக்கு முப்பத்தேழு விடயங்களை ஒதுக்கியிருக்கின்றது. பொலிஸ் அதிகாரத்தையும் காணி அதிகாரத்தையும் எந்த மாகாண சபைக்கும் விடாமல் அரசாங்கம் தடுத்து வைத்திருக்கின்றது. மற்றைய முப்பத்தைந்து விடயங்கள் தொடர்பாக மாகாண சபைகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த முப்பத்தைந்து விடயங்களில் வட மாகாண சபை நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதேனும் தடை இருக்கின்றதா என்பது பற்றி முதலமைச்சர் எதுவும் கூறவில்லை. ஆனால் மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை என்று மாத்திரம்
சொல்கிறார். மற்றைய மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுள் எவை வட மாகாண சபைக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன என்றாவது முதலமைச்சரோ மற்றவர்களோ சொல்வதில்லை. விபரமாக எதுவும் கூறாமல் அதிகாரங்கள் இல்லை எனக் கூறுவதை எப்படி விளங்கிக்கொள்வது?
எதையாவது கூறி மாகாண சபையைச் செயற்படுத்தாமல் விட்டால் அதனால் தமிழ் மக்களுக்கே பாதிப்பு. மாகாண சபையிலும் பார்க்க கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட ஒரு தீர்வை அண்மைய எதிர்காலத்தில் அடைவது சாத்தியமானதாக இல்லை. நாட்டின் சமகால அரசியல் சூழ்நிலை அதற்குச் சாதகமாக இல்லாதது ஒருகாரணம். அரசியல் தீர்வுக்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான எந்த முயற்சியையும் தமிழ்த் தலைமை மேற்கொள்ளாதது இன்னொரு காரணம். எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்லாது என்பது மற்றைய காரணம்.
கூட்டரசாங்க ஆட்சியாக இருந்தாலென்ன தனிக்கட்சி ஆட்சியாக இருந்தாலென்ன ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தான் மாறி மாறி ஆட்சியதிகாரத்தின் உச்சியில் இருக்கப்போகின்றவை. இரண்டு கட்சிகளுமே பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்லத் தயாராக இல்லை. மஹிந்த ராஜபக்ஷவும் இதைத் தெளிவாகக் கூறிவிட்டார். ரணில் விக்கிரம
சிங்கவும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். பதின்மூன்றாவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதில்லை என்று இரண்டு தலைவர்களும் சிங்கள மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கின்றார்கள். தேர்தல் சூடு பிடிக்கும் நேரத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக இவர்களில் யாராவது பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வைத் தருவதாகக் கூறினாலும் அது நடக்கப்போவதில்லை. சிங்கள மக்களுக்கு அளித்த வாக்குறுதியை எந்தச் சிங்களத் தலைவரும் மீறமாட்டார் என்பதுதான் இன்றைய உள்ளூர் அரசியல் ஒழுங்கு.
மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான தீர்வை இப்போதைக்கு எதிர்பார்ப்பது சாத்தியமில்லை என்பதையும் மாகாண சபையை அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாக ஏற்று அதிலிருந்து படிப்படியாக முன்னேறி அரசியல் தீர்வை அடையும் அணுகுமுறையே காலோசிதமானது என்பதையும் புரிந்து கொள்வதிலேயே தமிழ் மக்களின் விமோசனம் தங்கியுள்ளது. எனவே மாகாண சபையை நாங்கள் செயற்படுத்த வேண்டும். படிப்படியாக அதைப் பலப்படுத்த வேண்டும்.

No comments:
Post a Comment