இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Sunday, August 23, 2015

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சில சமூக ஊடகங்களும்

டந்த திங்கட்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தான் தோற்கடிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கான முயற்சியில், மிக முக்கியமான பாத்திரத்தை வகித்த புறக்காரணிகள் இரண்டு.
ஒன்று புலம்பெயர் தமிழர்கள். இரண்டாவது சமூக ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதி.

Sunday, August 9, 2015

இலங்கையின் தேர்தலை சூழ்ந்துள்ள இனவாத அரசியல்!

இலங்கையில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் மாத்திரமே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதோடு, ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கு எதிரானவர்களால் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனத்தை விமர்சனம் செய்வதையே தமது தேர்தல் பரப்புரையாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அதுவும் தமிழர் கூட்டமைப்பு தங்கள் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதோடு தெற்கில் சிங்களக் கட்சிகளின் பார்வை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பக்கமே திரும்பியிருக்கிறது.
புலிகள் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது, மீண்டும் பிரிவினை கோரிக்கையையே முன்வைக்கிறார்கள் என்ற குரல் அனேகமாக எல்லா மேடைகளிலும் எதிரொலிக்கிறது எனலாம்.

Thursday, August 6, 2015

ஆகஸ்ட் 17: தீர்ப்பு நாள்! ஒளிமயமா... இருள்யுகமா...!

வினைவிதைத்தவன் வினையறுப்பான் தினைவிதைத்தவன் தினையறுப்பான் என்ற முதுமொழியின் தெளிவை நாம் பிரயோக ரீதியில் புரிந்துகொள்வதற்கு இன்னும் இருப்பது இருவாரங்கள் மட்டுமே.
நாட்டுக்கு உயிர் ஊட்டுவதா? அல்லது புதிய தேசத்தை உருவாக்குவதா? என்ற இருபெரும் சவால்களுக்கு மத்தியில் அவற்றிற்கு தீர்ப்பை வழங்கவுள்ள ஏறக்குறைய 1 கோடி 50 இலட்சம் வாக்காளர்களில் எத்தனை இலட்சம் வாக்காளர்கள் எந்த தீர்மானத்தில்