இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Saturday, October 3, 2015

ஆடு நனைகிறதென்று...

சொற்கள் பொருளழியுங் காலத்தில், பொருள்கோடல் சொற்களை மேலும் பொருளற்றதாக்குகிறது. அது சொற்களின் பெறுமதியைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
மனித உரிமைகள் என்ற சொல்லாடல் இன்றைய உலக அரசியலின் திசைவழியில் வலிய சொல்லாகியிருக்கிறது. அது யாருக்கானது அல்லது யாருக்கு எதிரானது என்பது அதன் வலிமையைத் தீர்மானிக்கிறது. 
இப்போது ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளும் அதில் இலங்கையின் மீதான அக்கறையும் ஒருபுறம் கவனத்தை ஈர்க்கையில், மறுபுறம் பேரவையின் முக்கியமான குழுவுக்கான தலைமையை ஐ.நா. சவூதி அரேபியாவுக்கு வழங்கியிருப்பது கடும் விமர்சனத்துக்குட்பட்டுள்ளது.  

Thursday, October 1, 2015

ஈழத்தை நோக்கியே நகர்கிறோம் நாம்!

இந்தக் கட்டுரை வெளியாகிற தினத்தில் ஜெனிவாவில் புயலடித்து ஓய்ந்திருக்கக் கூடும்.... நீதி கிடைக்கும் என்கிற தமிழினத்தின் நம்பிக்கை சாய்ந்திருக்கக் கூடும்....! அதற்கு 24 மணி நேரத்துக்கு முன் எழுதுகிறேன் இதை!
2009ல் நடந்தது நிச்சயமாக இனப்படுகொலை -
அதை நிரூபிக்க சர்வதேச விசாரணை அவசியம் - 
இன அழிப்புக் குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது -
குற்றவாளி தன்னைத் தானே விசாரிக்க அனுமதிக்கக் கூடாது - இதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம் நாம்.

Saturday, September 12, 2015

யாருக்கு விசாரணை....! எதற்காக தயக்கம்....!

ஏதிர்பார்ப்புக்களோடு நடைபெற்ற எட்டாவது பாராளுமன்றத் தேர்தலும் கோலாகலமாக நிறைவடைந்து விட்டது. மூன்று தசாப்தத்திற்குப் பின்னர் தேசிய அரசியலில் அதியுச்ச பதவிகளில் ஒன்றான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பல்வேறு இழுபறிகளின் மத்தியில் தமிழினத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுவிட்டார்.
தென்னிலங்கையில் வரவேற்பும் கடுமையான இனவாத விமர்சனமும் மேலெழுந்துள்ள நிலையில் தமிழர் தாயகமான வட கிழக்கில் கொண்டாட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

Sunday, August 23, 2015

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சில சமூக ஊடகங்களும்

டந்த திங்கட்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தான் தோற்கடிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கான முயற்சியில், மிக முக்கியமான பாத்திரத்தை வகித்த புறக்காரணிகள் இரண்டு.
ஒன்று புலம்பெயர் தமிழர்கள். இரண்டாவது சமூக ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதி.

Sunday, August 9, 2015

இலங்கையின் தேர்தலை சூழ்ந்துள்ள இனவாத அரசியல்!

இலங்கையில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் மாத்திரமே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதோடு, ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கு எதிரானவர்களால் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனத்தை விமர்சனம் செய்வதையே தமது தேர்தல் பரப்புரையாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அதுவும் தமிழர் கூட்டமைப்பு தங்கள் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதோடு தெற்கில் சிங்களக் கட்சிகளின் பார்வை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பக்கமே திரும்பியிருக்கிறது.
புலிகள் கேட்டதையே கூட்டமைப்பும் கேட்கிறது, மீண்டும் பிரிவினை கோரிக்கையையே முன்வைக்கிறார்கள் என்ற குரல் அனேகமாக எல்லா மேடைகளிலும் எதிரொலிக்கிறது எனலாம்.

Thursday, August 6, 2015

ஆகஸ்ட் 17: தீர்ப்பு நாள்! ஒளிமயமா... இருள்யுகமா...!

வினைவிதைத்தவன் வினையறுப்பான் தினைவிதைத்தவன் தினையறுப்பான் என்ற முதுமொழியின் தெளிவை நாம் பிரயோக ரீதியில் புரிந்துகொள்வதற்கு இன்னும் இருப்பது இருவாரங்கள் மட்டுமே.
நாட்டுக்கு உயிர் ஊட்டுவதா? அல்லது புதிய தேசத்தை உருவாக்குவதா? என்ற இருபெரும் சவால்களுக்கு மத்தியில் அவற்றிற்கு தீர்ப்பை வழங்கவுள்ள ஏறக்குறைய 1 கோடி 50 இலட்சம் வாக்காளர்களில் எத்தனை இலட்சம் வாக்காளர்கள் எந்த தீர்மானத்தில்

Thursday, July 16, 2015

விக்னேஸ்வரன் தான் திருப்புமுனை!

பதவி நாற்காலியில் பிசின், பெவிகால் எல்லாம் போட்டு பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ள முயலும் தலைவர்களையே பார்த்துப் பார்த்து வெறுத்துப்போனவர்கள் நாம். 'எல்லாம் நம்முடைய தலைவிதி' என்று நம்மை நாமே சலித்துக் கொள்வதிலும் நம்மை அடிக்க ஆளே இல்லை.இந்த சொந்த சோகத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத்தான் ஈழத்தைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்ப்பவர்கள்தான், விக்னேஸ்வரன் என்கிற மக்கள் தலைவனின் உயரத்தை உணர முடியும். 
பதவி - நாற்காலி என்கிற கவலையெல்லாம் இல்லாமல், துண்டை உதறித் தோளில் போட்டபடி உண்மையைப் புட்டுப் புட்டு வைத்து விடுகிறார் விக்னேஸ்வரன். அதைப் பார்த்துத்தான் பயப்படுகிறது இலங்கை.

Tuesday, July 14, 2015

பேரரசரின் மீள் வருகை

கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும்,