விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும் வேறு பல காரணிகளாலும் இன்றைய வாழ்வு சவால் நிறைந்ததாக உள்ளது. இச்சவாலினைச் சமாளிக்க மாணவர்களின் ஆங்கில அறிவு மேம்படுத்தப்படல் அவசியம் என்பதை மனச்சாட்சியுள்ள கற்றறிந்தோர் ஏற்றுக் கொள்வர்.
இன்று பலர் ஆங்கில மொழியாற்றல் இன்மையால் தங்களின்
திறமைகளை வெளிக் கொணர முடியாமல் உள்ளனர். ஆங்கில மொழித் தேர்ச்சி தனிமனித சமூக மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு இன்றியமையாதது என்பது யதார்த்தம். இதற்கான காரணங்கள் பல. இது தொடர்பாக "ஆங்கில மொழியின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியிடப்பட்டதுடன் பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட முன்மொழிவின் பிரதியும் இணைக்கப்பட்டுள்ளது. மேற்படி முன்மொழிவு பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் யாராவது கருத்து தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
முன்மொழிவின் பிரதிகள் வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. எனவே வேறு விடயங்களுக்கு அறிக்கை விடுப்பவர்கள் இவ்விடயத்தில் மௌனம் சாதித்தது அவர்களுக்கே வெளிச்சம்.
முன்மொழிவின் சாரம்சமானது உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தி பல்கலைக்கழகம், கல்வியியல் கல்லூரி அனுமதி கிடைக்கப் பெறதாத ஆங்கில மொழியில் தகுதியுடைய ஆர்வமுள்ளவர்களைத் தெரிவு செய்து குறுகிய கால ஆகக் குறைந்தது ஆறு மாத பொருத்தமான பயிற்சியின் பின்னர் ஆரம்ப பாடசாலைகளில் சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் மாணவச் சிறார்களுக்கு இளம் பராயத்திலேயே ஆங்கிலக் கல்வியினை ஆர்வமுடன் கற்பதற்கு ஊக்குவித்தல் வழங்குவதாகும். நிதித் தேவையினை பழைய மாணவர்கள் சங்கங்களின் ஊடாக மற்றும் புலம்பெயர் அமைப்புகள் ஊடாகப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம் அல்லது விசேட நியதிகளை ஏற்படுத்தி முயற்சிக்கலாம்.
பத்திரிகைச் செய்திக்கு இணங்க விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து மனித வளத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு பிரேரணை வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஆங்கிலக் கல்வியைப் பொறுத்தவரையில் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு உரிய முறையில் புகட்டப்படல் வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
தாங்கள் கற்றறிந்தவர் என்ற வகையில் விடயம் தொடர்பில் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும் என நம்புகின்றேன். மேலும் 1956 ஆம் ஆண்டின் பின்னர் தொடர்பு மொழியான ஆங்கில மொழி புறக்கணிக்கப்பட்டமையால் அதன் விளைவுகள் தாங்கள் அறிந்தவையே.
1948 இல் ஆங்கிலேயர் நாட்டிலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட போதும் ஆங்கில மொழி நாட்டின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல மக்களின் முன்னேற்றத்திற்கும் மிகவும் அத்தியாவசியம் என்பது கண்கூடு. முன்னோர் பல துறைகளிலும் சிறந்து விளங்கியமைக்கு ஆங்கிலக் கல்வியும் முக்கிய பங்காற்றியமை வெள்ளிடைமலை. அவர்கள் ஆங்கில மொழிக் கல்வியை ஆரம்ப பாடசாலைகளில் உரிய முறையில் கற்பதற்கான வசதிகள் கிடைக்கப் பெற்றிருந்தன. ஆனால் நிலைமை தற்போது மாறியுள்ளது.
தற்போதைய யதார்த்த நிலை
ஆரம்ப வகுப்புகளில் தரம் 35 வரை உரிய முறையில் ஆங்கிலக் கல்வி போதிக்காமையினால் தரம் ஆறிலிருந்து அல்லது அதற்கு மேல் ஆங்கில மொழியைக் கற்பதில் மாணவர்கள் பின்னடைகின்றனர். அதற்கான காரணங்களாக ஆங்கில சொல்லின் எழுத்துக் கூட்டல் (Spelling), உரிய கருத்தினை புரிந்து கொள்ளல், உரிய உச்சரிப்பினை (Pronunciation) ஏற்படுத்தும் வகையில் உதவும் உறுப்புகளான நாக்கு, உதடுகள், பற்கள், அண்ணம் ஆகியவற்றிற்கு இளம் பராயத்திலேயே போதிய பயிற்சியின்மை ஆகும். வட மாகாணத்தில் உள்ள ஓர் பிரபல பாடசாலையில் தரம் 3 5 வரை பயிலும் மாணவர்கள் சரியான முறையில் ஏ.பி.சி.டி எழுதும் முறை தெரியாதவர்களாக உள்ளமையினை நேரில் அவதானித்து அது பற்றி ஆராய்ந்த போது காரணம், போதிய பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இன்மையேயாகும்.
எனவே மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தால் எனது முன்மொழிவின் தாற்பரியம் இலகுவாக விளங்கும். முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். எந்த ஒரு மொழியினையும் சிறு பராயத்திலிருந்தே செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன்களுடன் கற்றல் வேண்டும். இவ்விடயம் தொடர்பில் களம் அமைத்துக் கொடுக்கப்படின் உரை ஆற்றுவதற்கும் தயாராகவுள்ளேன்.
எனவே காலங்கடந்தாலும் வருங்கால சந்ததியினரின் முன்னேற்றம் கருதிச் செயற்படும் படி பணிவுடன் வேண்டுவதுடன் இன்று பலர் ஆங்கில மொழித் தேர்ச்சி இன்மையால் தங்களின் இயல்பான திறமைகளை வெளிப்படுத்த முடியாமற் திணறுகின்றனர். என்பதற்கு தங்களின் மனச்சாட்சியே சான்று.
நன்றி-தினக்குரல்
லயன் அம்பலவாணர் துரைசிங்கம்
ஸ்ரேசன் வீதி, வெள்ளவத்தை

No comments:
Post a Comment