விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈட்டப்பட்ட வெற்றிக்கு பலரும் உரிமை கோரி வருவதைப்போலவே, நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் தாமே மூல காரணமென்று பலரும் உரிமை கோரி வருகின்றனர். தமிழர்களும்
முஸ்லிம்களும் இந்தத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருந்தனர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இங்கு தமிழர்கள் என்று கூறுவது, வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலுமுள்ள தமிழர்களையே சுட்டிநிற்கிறது. முஸ்லிம்கள்
எனும்போது, அதுவும் கிழக்கை மட்டுப்படுத்தாமல், ஒட்டுமொத்த இலங்கையிலுள்ள முஸ்லிம்களையுமே சுட்டிநிற்கிறது. இந்தத் தேர்தலில் தாம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளாலேயே தோல்வி கண்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மெதமுலானவில் கூறியிருக்கிறார். அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள வாக்குகளால் வெற்றி பெறவில்லை என்றும் தமிழ், முஸ்லிம் வாக்குகளாலேயே வெற்றி பெற்றார் என்றும் கூறப்படுவதை ஜாதிக ஹெல உறுமய ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 9 இலட்சம் சிங்கள பௌத்த வாக்குகளை தாம் பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கிறார். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழ் வாக்குகளாலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளது. இன்னொரு பக்கத்தில், முஸ்லிம்கள் தரப்பிலோ 14 இலட்சம் முஸ்லிம் வாக்காளர்களில் 90 சதவீதமானோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தனர் என்று கூறப்படுகிறது. மலையகக்கட்சிகள் ஏதும், அங்குள்ள தமிழர்களே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை தீர்மானித்தது என்று கூறியதாக இன்னமும் அறியவில்லை. ஆனால், அவர்களும் அதற்கு உரிமை கோரக்கூடியவர்களே என்பதை நுவரெலிய - மஸ்கெலிய தொகுதியில், 120,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்ற வெற்றியே உறுதிப்படுத்துகிறது. அவ்வாறாயின், மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியையும் தீர்மானித்தது யார் என்ற கேள்வி எழுகிறது. எல்லாத்தரப்பினரதும் ஒன்றிணைவே இந்த மிகப்பெரிய அரசியல் புரட்சிக்கான அடித்தளம் என்பதை எல்லோரும் மனதில் நிறுத்தவேண்டும். இது இலங்கைத்தீவுக்கு வெளிப்படையாக ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது. எல்லா இனத்தவர்களும் இணைந்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டால், அசைக்கமுடியாதெனக் கருதப்படும் எதையும் அசைக்கவும் முடியும், சாதிக்கவும் முடியும் என்ற உண்மையை இது உணர்த்தியிருக்கிறது. அதேவேளை, தர்க்க ரீதியாக தேர்தல் முடிவுகளை அலசுவதானால், சில சரி, பிழைகளை சுட்டிக்காட்டியேயாக வேண்டியது அவசியம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூடுதலாக பெற்றது சுமார் 449,072 வாக்குகளே. இந்த வாக்குகளுக்கே எல்லாத் தரப்பினரும் உரிமை கோர போட்டியிடுகின்றனர். ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் சிங்களவர்கள் அதிகம் வாழும் 90 இற்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறார் என்பது முக்கிய விடயம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரையில், தமது சொந்த மாவட்டமான பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்டவையில் வெற்றி பெற்ற எல்லா இடங்களுமே சிறுபான்மையினர் முழுமையாகவோ, கணிசமாகவோ வசிக்கின்ற பகுதிகள் என்பது தெளிவான உண்மை. அவர் வெற்றி பெற்ற 12 மாவட்டங்களில் தமிழ், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாவட்டங்களும் கண்டி, நுவரெலியா, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களும் அடங்கியுள்ளன. பொலன்னறுவையில் கூட முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கின்றனர். எனவே, சிங்கள மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார் என்று ஒருபோதும் கூறமுடியாது. அவை மட்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கவில்லை. சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார் என்பதை தர்க்க ரீதியாக ஒருபோதும் நிரூபிக்கமுடியாது. ஏனென்றால், தமிழ், முஸ்லிம் மக்களின் செல்வாக்குக்கு அப்பாற்பட்ட – பொலன்னறுவை தவிர்ந்த வேறெந்த மாவட்டத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, அவர் சிங்கள வாக்காளர்களால் மட்டும் தெரிவானவர் என்று ஒருபோதும் எந்தவொரு தரப்பினராலும் வாதிடமுடியாது. அதேவேளை, கிழக்கில் அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் கண்டி, காலி, களுத்துறை, கேகாலை, கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் வாக்குகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு கணிசமாக உதவியுள்ளன. முஸ்லிம்களின் வாக்குகள் செறிவாகவுள்ள கல்முனை, சம்மாந்துறை, மூதூர், மன்னார் உள்ளிட்ட தொகுதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிட்டத்தட்ட 85 தொடக்கம் 90 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. எனவே, இந்தத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு முஸ்லிம்களின் பங்கை ஒருபோதும் குறைத்து மதிப்பிடமுடியாது. முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளின் வன்முறைகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. அது முஸ்லிம் வாக்காளர்களை அதிகளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணமாகியது. எனினும், ஒட்டுமொத்தளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு முஸ்லிம்கள் எந்தளவுக்கு பங்களித்துள்ளனர் என்று துல்லியமாக கணிப்பிடுவதில் சிக்கலுள்ளது. காரணம், அவர்கள் நாட்டில் பரந்துவாழும் ஒரு சமூகமாக இருப்பதால், பங்களிப்பை துல்லியமாக அளவிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. கிழக்கிலும் கூட, முஸ்லிம்கள் சில இடங்களில் மாத்திரம் செறிவாக வாழ்கின்ற நிலையில், தமிழர்களும் இணைந்தே வாழ்வதால், அதனை முற்றிலும் சரியானதொன்றாக எடுக்கமுடியாது. ஆனால், வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பெரும்பான்மையாக தமிழர்களே உள்ள நிலையில், இந்தத் தேர்தல்களில் அவர்களின் பங்களிப்பை தெளிவாகவே அடையாளப்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளது. வடமாகாணத்திலுள்ள தமிழர்கள், இந்தத் தேர்தலில் மிகத்தெளிவான ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அளித்துள்ளனர். வடக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு அலை நிச்சயம் வீசுமென்று எதிர்பார்த்தவர்கள் கூட, அது இந்தளவுக்கு உச்சக்கட்டத்திலிருக்கும் என்பதை கணித்திருக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி, சர்வதேச ஊடகங்களுக்கு எந்தளவுக்கு நம்பமுடியாதொரு செய்தியாக உள்ளதோ, அதுபோலவே வடக்கில் அவருக்கு கிடைத்த வாக்குகளும் நம்பமுடியாத ஆச்சரியமே. வடமாகாணத்தை பொறுத்தவரையில், ஜனாதிபதி தேர்தல்களில் ஆர்வம் காட்டும் போக்கு ஒருபோதும் இருந்ததேயில்லை. ஓர் அந்நியத்தன்மையுடனேயே வடக்கிலுள்ள தமிழர்கள் வாக்களித்துவந்தனர். அதுவும் மிகக் குறைந்தளவானோரே தேர்தலில் பங்களிப்பது வழக்கம். வடக்கில் 1982இல் 54 சதவீதம், 1988இல் 18 சதவீதம், 1994இல், 12.5 சதவீதம், 1999இல், 25 சதவீதம், 2005இல் 13 சதவீதம், 2010இல் 33 சதவீதம் என்று ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்த நிலையை இந்தமுறை ஜனாதிபதித் தேர்தல் முற்றாகவே மாற்றியமைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் 69 சதவீதத்துக்கும் அதிகமானோர் வடக்கில் வாக்களித்திருக்கின்றனர் என்பது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முக்கியமானதொரு விடயம். கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த வடமாகாணசபைத் தேர்தலில் கூட இந்தளவுக்கு வாக்களிப்பு இடம்பெற்றிருக்கவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விடயம். அதாவது, மாகாணசபைத் தேர்தலை விடவும், முக்கியமானதாக வடக்கிலுள்ள மக்களால் ஜனாதிபதி தேர்தல் அணுகப்பட்டுள்ளது. தீவிர தமிழ்த் தேசியம் பேசுவோரால், அவ்வளவாக ஜீரணிக்கமுடியாத விடயமாக இருக்கிறது. அதனாலேயே, வடமாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புடன் இதனை எவரும் ஒப்பிட முன்வரவில்லை. வடமாகாணசபைத் தேர்தலில் 67.5 சதவீதமான வாக்குகளே பதிவாகியிருந்தன. ஆனால், இந்த ஜனாதிபதித் தேர்தலில் கிட்டத்தட்ட ஒன்றரை சதவீத வாக்குகள் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, வடமாகாணசபைத் தேர்தலில் 485,813 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் 534,430 வாக்குகள் வடமாகாணத்தில் அளிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் வடமாகாணசபைத் தேர்தலை விட அதிகமாக வாக்களித்துள்ளனர். இதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு அலை என்றும் கூறலாம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான அலை என்றும் கூறலாம். தேசிய அரசியல் பங்களிக்கும் வடக்கு மக்களின் ஆர்வம் என்றும் கூறலாம். அதனை அவரவர் விருப்பத்துக்குரிய தெரிவாக விட்டுவிடுகிறோம். நடுநிலையாக நோக்கினால், இந்த மூன்றினதும் கலவையே வடக்கின் வாக்களிப்பு வீத உயர்வுக்கு காரணம் என்பதை மறுக்கமுடியாது. இதனை விட இன்னொரு ஆச்சரியமான விடயமும் உள்ளது. வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளித்தவர்களை விடவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 353,595 வாக்குகள் (78.48 சதவீதம்) கிடைத்திருந்தன. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாணத்தில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 394,991 (76.5 சதவீதம்) ஆகும். இதற்கு வடமாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன இம்முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தமையும் ஒரு காரணம். முஸ்லிம் வாக்குகளை கழித்துப்பார்த்தால், வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளுக்கு சற்றுக் குறைவாகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கிலுள்ள தமிழர்கள் ஆதரவளித்துள்ளனர் என்பதை உணரலாம். அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இணையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வடக்கிலுள்ள தமிழர்கள் முன்வந்தமையை, தெற்கிலுள்ள சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் சாதகமானதொரு விடயமாகவே அணுகவேண்டும். ஏனென்றால், வடக்கிலுள்ள தமிழர்களை பிரிவினைவாதிகளாக சித்திரித்து, இனவாதம் பேசுவது அவர்களின் வழக்கம். இந்தத் தேர்தலில், அத்தகைய மோசமான கருத்துக்கள் அபப்பட்டமாகவே பரப்பப்பட்டன. ஆனால், தேசிய அரசியலின் மீதுள்ள தமது நாட்டத்தை வடக்கிலுள்ள மக்களும் வெளிப்படுத்தியுள்ளனர். தேசிய அரசியலில் தமக்குள்ள பங்கையும் தாம் எந்தளவுக்கு தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர் என்பதையும் அவர்கள் தெளிவான ஆணையின் மூலம் புலப்படுத்தியிருக்கிறார்கள். இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துக்கு தட்டிக்கழிக்க முடியாதொரு பொறுப்பாக மாறியிருக்கிறது. கடந்த காலங்களில், வடக்கு மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்று கூறிக்கூறியே காலங்கடத்தி வந்த ஆட்சியாளர்களே இருந்தனர். ஆனால், இப்போது வடக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அவர்களால் ஆதரிக்கப்பட்டவர் தான் ஆட்சியாளராக மாறியிருக்கிறார். இவ்வகையில், வடக்கிலுள்ள மக்களின் மீது, அவர்களின் பிரச்சினைகளின் மீது தனியான கவனம் செலுத்தப்பட வேண்டியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதனை ஒருபோதும் அவராலோ, அவரது அரசாங்கத்தினாலோ தட்டிக்கழிக்க முடியாது. வடக்கிலுள்ள மக்கள் தனிநாட்டை கோரவில்லை. அவ்வாறு கோரியிருந்தால், அவர்கள் இந்தளவுக்கு வாக்களிக்க முன்வந்திருக்கமாட்டார்கள். அவர்கள் நிலைமையை புரிந்துள்ளார்கள். உணர்ந்துள்ளார்கள். அதனால், யதார்த்தமாக தம்மை மாற்றிக்கொள்ளத் துணிந்திருக்கிறார்கள். அதற்காக, வடக்கில் தமிழ்த் தேசியவாதம் செத்துவிட்டதாகவோ, வலுவிழந்துவிட்டதாகவோ அர்த்தம் கொள்ளமுடியாது. தமிழ்த் தேசியவாதம் தமிழரின் தனித்தன்மையை உறதிப்படுத்துவதற்கானதே தவிர, அது ஏனைய இனத்தவர்களை அச்சுறுத்துவதற்கானது அல்ல என்ற உண்மையை இந்தத் தேர்தல் உணர்த்தியிருக்கிறது. இது நல்லிணக்க முயற்சிகளில் முக்கியமான மைல் கல் என்றும் கூறலாம். சர்வதேச அளவில், இந்த வாக்களிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துக்கு கூடுதல் அழுத்தங்களை கொடுக்கும். ஏனென்றால், தமிழ் மக்கள் தேசிய அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ள நிலையில், அவர்களை அரவணைத்துச் செல்ல தெற்கிலுள்ள சக்திகள் தயாராகவேண்டும் என்ற அழுத்தங்களை இலங்கை அரசு எதிர்கொள்ளும். அத்தகைய அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமே, தமிழர்களுடன் இணக்கப்பாட்டை உருவாக்கிக்கொள்ள முனைவது புத்திசாலித்தனமானது. அது நடக்குமா? நடப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்திலுள்ள கடும் போக்காளர்கள் அனுமதிப்பார்களா?
-கே.சஞ்சயன்

No comments:
Post a Comment