இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Wednesday, December 31, 2014

வதந்திகளை நம்பவேண்டாம்: மஹிந்த பேட்டி

ன் அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்களை கேட்டுப்பாருங்கள் எம்.பிக்களை கேளுங்கள்.  என்னால் தமிழர்களுக்கு எதிராக நடக்க முடியாது.  என் உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத்தமிழர் ஒருவரை திருமணம் செய்திருக்கின்றார். மற்றுமொருவர் கண்டியைச்சேர்ந்த மலையகத்து இஸ்லாமியரை திருமணம்

Friday, December 26, 2014

ஆறாத வடுக்களையும் வலிகளையும் மட்டும் விட்டுச்சென்ற ஆழிப்பேரலை!

ழிப்பேரலை ஊருக்குள் புகுந்து ஊழித்தாண்டவம் ஆடி ஆண்டுகள் பத்து  கடந்து விட்டன. ஆனாலும் அவை ஏற்படுத்திச்சென்ற வலிகளும் வடுக்களும் இன்றும் மக்கள் மனங்களை விட்டு அகலவில்லை. 2004 டிசம்பர் 26   இதே நாளில் தேசமே ஒரு கணம் ஸ்தம்பித்துப்போனது.எங்கு பார்த்தாலும் ஒப்பாரிச் சத்தங்கள், கூக்குரல்கள், பிணக்குவியல்கள், மக்கள் மனங்களில் அதிர்ச்சி, ஏக்கம், அச்சம், அடுத்து என்ன நடக்குமோ? என்ற மிரட்சி, கரையோரப் பிரதேசத்து மக்களின் வாழ்க்கையே இருண்டு போனது. யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. எல்லோரும்

Thursday, December 25, 2014

புறக்கணிப்பு கோசம்!

னாதிபதித் தேர்தலை  தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த நாட்களில் பரவலாக முன்வைக்கப்பட்டன. இன்னமும் அந்தக் கோரிக்கைக் கோசங்கள் தொடர்கின்றன. குறிப்பாக, தமிழ் சமூக- இணைய ஊடகப் பரப்பில், ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிப்பதன் அவசியம் பற்றிய கருத்தாடல்கள் குறிப்பிட்டளவில் இடம்பெற்றுவருகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்புக் கோசம் தமிழ் மக்களிடம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த நிலையில், அதை இன்னும் அதிகப்படுத்தி வைத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அறிவிப்பு. முன்னாள்

Monday, December 22, 2014

மாட்டிக் கொண்ட மு.கா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவு இன்று, மு.கா.வின். முடிவு நாளை, முடிவின்றி மு.கா., அதி உயர் பீட கூட்டம் முடிவு, முடிவெடுக்கும் அதிகாரம் மு.கா. தலைவரிடம், மு.கா.வின் முக்கிய கூட்டம் நாளை, இது போன்ற செய்தித் தலைப்புக்கள் கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வந்த வண்ணமே இருக்கின்றன. 

ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கும்

Sunday, December 21, 2014

ஜெயிக்கப் போவது யார்? நடக்கப்போவது என்ன?

லங்கை அரசியல்வரலாற்றில் 2015 ஜனாதிபதித் தேர்தல் பல்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் நெருக்கடிகள் மிகுந்ததாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதியாக இருந்த ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்ற முன்னைய விதி நீக்கப்பட்டு ஜனாதிபதியாக இருந்த ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் பதவி வகிக்க முடியும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டு பாதை திறந்து

Thursday, December 18, 2014

பெஷாவர் தாக்குதலும் மனிதநேய ஹாஷ்டேகும்!

ஹாஷ்டேக் என்பது எத்தனை அருமையான ஆயுதம் என்பதும், அமைதிக்காக குரல் கொடுக்கவும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவும் அது எத்தனை அழகாக பயன்படும் என்பது,  இந்த வாரம் இரண்டாவது முறையாக நிருபிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவரில் பள்ளிக்குழந்தைகள் மீது நடந்த கோர தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் #இந்தியாவித்பாகிஸ்தான் ஹாஷ்டேக் (#IndiawithPakistan ) டிவிட்டரில் தொடர்ந்து முன்னிலை வகித்து மனிதநேயத்தை உரத்த குரலில் வலியுறுத்தியுள்ளது.

திரிசங்கு நிலையில் கூட்டமைப்பு

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கப்போகும் நிலைப்பாடு, என்ன என்பது தொடர்பான  கேள்விகள் இன்னமும் இருந்துவருகின்றன.  தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னிருந்தே இது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டுவருகிறது.

ஆரம்பத்தில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'இன்னமும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியான பின்னர் யோசிக்கலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிவந்தனர். தேர்தல் அறிவிப்பு வெளியான

நல்லிணக்கம் தொடர்பாக எதிரணியும் பொது உடன்பாட்டை எட்டுவது அவசியம்

 வ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது இன்றைய 

நிலைப்பாடும் நய நுட்ப வேற்றுமை கலந்ததாகும். அவர்கள் தொடர்ந்தும் எதிரணியிலேயே இருந்து வந்ததால் கடந்த பத்தாண்டு காலத்தில் அவர்கள் அரசாங்கத்தால் முற்றாகவே ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளனர்.  இதன் காரணமாக  இக் கூட்டமைப்புக்கு
( த.தே.கூ.) வாக்களித்த வாக்காளர் சமூகத்திற்கு இக் கட்சியினரால்  மிகவும் குறைந்த அளவிலேயே ஏதும் செய்யக் கூடியதாக இருந்ததனை வடக்கு, கிழக்கு கிராமங்களுக்குச் சென்று கவனிப்பவர்களுக்கு நன்கு விளங்கும். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

Tuesday, December 16, 2014

ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல்

முதல் முறையாக தற்போதுள்ள ஜனாதிபதி  மூன்றாம் தவணை பதவி நாடுவதனால் மட்டுமல்லாது,  இதுவே அரசியல் அமைப்பின் பதினெட்டாம் சீர்திருத்தத்திற்குப் பின்னர் நடைபெறும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் என்பதினால் 2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுகின்றது.   வாக்குரிமையானது மக்களின் அடிப்படை உரிமை மட்டுமல்லாது மக்களின்

Tuesday, December 9, 2014

வாக்குறுதி மீறலின் வரலாறு

ம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையே மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கிறது. அக்கட்சி அதனை நேரடியாக கூறாவிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என்று கூறுவதனாலும் அவ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பகிரங்கமாகவே கூறி வருவதனாலும் அவ்வாறு தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலின் போது தேற்கடிக்க வேண்டுமாயின் நடைமுறை சாத்தியமான ஒரே வழி, மைத்திரிபாலவை

Monday, December 8, 2014

ஜனாதிபதித் தேர்தலில் உயிர்பெறும் புலிகள்!

னாதிபதித் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்ட கையோடு, புலிகளுக்கு உயிரூட்டும் பிரசாரமும் முடுக்கி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது பிரிக்கப்படாத இலங்கையில் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு என்று தலைவர் இரா. சம்பந்தன் எத்தனை தடவை தான் கூறினாலும், பிரிவினை தான் கூட்டமைப்பின் நோக்கம் என்ற பிரசாரத்தினையே மூலதனமாகக் கொண்டு மகிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கப்போகும் திட்டம்

Saturday, December 6, 2014

எதிரணியின் பாய்ச்சல்!

ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஸ்யங்களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது. தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறபோது, அந்தப் போராட்டத்தை உடைத்து வெற்றி பெறும் எண்ணத்தில் கணிசமானளவு முன்னோக்கி வந்துள்ளதாக பொது எதிரணி கருதுகிறது.  
பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை சொந்த மாவட்டமான பொலனறுவையில்,

Tuesday, December 2, 2014

முதல் கோணல்!

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திடீரென தாம் எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்ததோடு, அதுவரை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமய கட்சித்தலைவர்களும் எதிர்க்கட்சிகளுக்காக பொது வேட்பாளர் ஒருவரை தேடி அலைந்த மாதுளுவாவே சோபித தேரரும் ஊடகங்களினால் மறக்கப்பட்டுவிட்டதைப் போலாகிவிட்டார்கள்.