இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையே மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கிறது. அக்கட்சி அதனை நேரடியாக கூறாவிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என்று கூறுவதனாலும் அவ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பகிரங்கமாகவே கூறி வருவதனாலும் அவ்வாறு தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலின் போது தேற்கடிக்க வேண்டுமாயின் நடைமுறை சாத்தியமான ஒரே வழி, மைத்திரிபாலவை
வெற்றிபெறச் செய்வதே. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி அதனை நேரடியாக மக்களுக்கு கூற தயங்குகிறது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்பதே இந் நாட்களில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அரசியல் சுலோகமாக இருக்கிறது. மைத்திரிபாலவின் பிரதான சுலோகமாக இருப்பதும் அதுவே. எனவே மக்கள் விடுதலை முன்னணி அவரை ஆதரிப்பதில் ஆச்சரியப்படுதற்கெதுவுமில்லை.
ஆனால், மைத்திரிபாலவின் அரசியற் போராட்டத்தில் பங்காளியாக சேர்வதற்கோ, மைத்திரிபாலவின் அரசியல் கூட்டமைப்புக்கு வெளியே இருந்து அவருக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கோருவதற்கோ முன்வராமல் இருப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணிக்கு காரணங்கள் இல்லாமலில்லை. இரண்டு ஜனாதிபதிகள் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பான விடயத்திலேயே மக்கள் விடுதலை முன்னணியை ஏமாற்றியிருப்பது இதில் முக்கிய காரணமாகும்.
இது தமிழ் மக்கள் பலமுறை பெற்ற அனுபவமாகும். பல அரச தலைவர்கள் தமிழ் மக்களுக்கு எத்தனையோ முறை பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள். பின்னர் பதவிக்கு வந்து அவற்றை மறந்தும் இருக்கிறார்கள். எனவே இலங்கையில் ஆட்சியாளர்களை நம்ப முடியாது என்ற மக்கள் விடுதலை முன்னணியின் வாதத்தை தமிழ் மக்கள் நிராகரிக்க மாட்டார்கள்.
மைத்திரிபாலவின் அரசியற்கூட்டமைப்பில் மக்கள் விடுதலை முன்னணி சேர்ந்தால், அவர் சார்பில் மக்கள் விடுதலை முன்னணியும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாகவும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்க வேண்டியிருக்கும்.
பின்னர் மைத்திரிபால பதவிக்கு வந்ததன் பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தாம் கஷ்டமான நிலைமையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என மக்கள் விடுதலை முன்னணி அஞ்சுகிறது.
மற்றவர்கள் சார்பில் பொறுப்புக்களை ஏற்க முடியாது என்று அக்கட்சி, அதனால் தான் கூறி வருகிறது. மற்றைய கட்சிகள் சார்பில் அவ்வாறு வாக்குறுதிகளை வழங்கி தாமும் ஏமார்ந்து மக்களையும் ஏமாற்றிய அனுபவம் அக் கட்சிக்கு இருக்கிறது.
2003ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை உருவாக்கி, 2004ஆம் ஆண்டு கூட்டாட்சியை நிறுவி இறுதியில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில், 2005ஆம் ஆண்டு அரசாங்கத்திலிருந்து விலக வேண்டிய நிலை அக் கட்சிக்கு ஏற்பட்டது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் பற்றி இந் நாட்டின் இரு பிரதான கட்சிகளும் கடும் சந்தர்ப்பவாத கொள்கைளையே கடைபிடித்து வந்துள்ளன. தம்மிடம் இருக்கும் போது அதனை பாதுபாப்பதும் மற்றவரிடம் அது சென்றடைந்த போது அதனை இரத்துச் செய்ய முயற்சிப்பதுமே இவ்விரண்டு கட்சிகளினதும் கொள்கையாகும்.
தனிச் சிறப்பானதோர் அரசியல் பொருளாளதார சூழ்நிலையிலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறை இலங்கையில் அறிமுகஞ் செய்யப்பட்டது.
அதாவது 1970ஆம் ஆண்டுகளின் இறுதிக்கட்டத்தில் இந்நாட்டின் பெரும்பாலானவர்களின் அரசியல் நம்பிக்கைகளுக்கு எதிராக, தாராள பொருளாதார முறையை அறிமுகஞ் செய்து வைக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன விரும்பினார். அதன்; பின்னணியிலேயே அது அறிமுகப்படுத்தப்பட்டது.
1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி பதவிக்கு வரும் போது நாட்டில் மிக மோசமான பொருளாதார நிலை காணப்பட்டது. பாணுக்கு கியூ, அரிசிக்கு கியூ, இரண்டு கொத்துக்கு மேல் அரசியை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு எடுத்துச் செல்வதும் தடை. அவ்வாறு அரிசி எடுத்துச் செல்கிறவர்களை கைது செய்ய வீதிகளில் தடைகளும் போடப்பட்டு இருந்தது.
தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு பொருட்கள் மட்டுமே நாட்டின் பிரதான ஏற்றுமதி வருமானமாக இருந்தது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஆடை உற்பத்தி அக் காலத்தில் இருக்கவில்லை. அவை பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தாராள பொருளாதாரத்தின் விளைவேயாகும்.
இந்த மோசமான பொருளாதார நிலைமைக்கு பரிகாரமாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்து தாராள பொருளாதாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன நினைத்தார்.
ஆனால், அக் காலத்தில் மரபு ரீதியான இடதுசாரி கருத்துக்களே நாட்டில் பரவலாக இருந்தன. ஏழாண்டுகள் இடதுசாரி கட்சிகள் பதவியில் இருந்தமையால் அரச துணையுடன் வளர்ந்த பலமான இடதுசாரி தொழிற்சங்க இயக்கம் ஒன்றும் நாட்டில் இருந்தது. அந்த இடதுசாரி கருத்துக்களின் படி வெளிநாட்டு முதலீடானது வெளிநாட்டு சுரண்டலாக கருதப்பட்டது.
எனவே, தமது பொருளாதார முறையை தடையின்றி நாட்டில் செயற்படுத்த பொருத்தமான ஆட்சி முறையொன்றும் ஜே.ஆருக்கு அவசியமாகியது.
அதாவது தாம் தாராள பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தும் போது எழக்கூடிய எதிர்ப்புக்களை முறியடிக்கக்கூடிய அடக்குமுறை ஆட்சிமுறையொன்றும் அந்த அடக்குமுறைக்கு தமக்கு அதிகாரம் வழங்கும் சட்ட அமைப்பொன்றும் அவருக்கு அவசியமாகியது.
அப்போதைய மோசமான பொருளாதார நிலைமையின் காரணமாக, 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவருக்கு நாடாளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. அவர் அதனை பாவித்து 1978ஆம் ஆண்டு கொண்டுவந்த இரண்டாவது குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் தமக்கு வேண்டியதை செய்து கொண்டார். நாடாளுமன்றத்துக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ வகை சொல்லாத நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் அவ்வாறு தான் முதன் முதலாக இந்நாட்டில் உருவாகினார்.
அக் காலத்தில் தொகுதி வாரி தேர்தல் முறையே நாட்டில் இருந்தது. தமது ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்த தேர்தல்களின் போதும் அக் கட்சியே நாடளாவிய ரீதியில் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளது என்பதனை கண்ட ஜே.ஆர்., சதாகாலம் ஐ.தே.க.வே பதவியியல் இருக்கும் வகையில் விகிதாசார தேர்தல் முறையையும் அத்தோடு அறிமுகப்படுத்தினார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி தாராள பொருளாதாரத்தை ஆரம்பித்து சுதந்திர வர்த்தக வலயங்களை ஆரம்பித்தார். அவற்றில் தொழிற்சங்கங்கள் ஆரம்பிப்பது தடை செய்யப்பட்டது. ஏனைய இடங்களில் இடம்பெற்ற தொழிற்சங்க போராட்டங்களும் மிக மோசமான முறையில் அடக்கப்பட்டன.
இந்தப் பொருளாதார மாற்றங்களின் நன்மை தீமைகள் எவ்வாறாயினும் அந்தப் பொருளாதாரத்தின் பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையின் ஆரம்ப நோக்கம் எதிர்ப்புக்களை அடக்குவதேயாகும்.
அந்த நிறைவேற்று ஜனாதிபதி தொழில் ரீதியாக மட்டுமன்றி தனிப்பட்ட முறையில் செய்த ஒரு காரியத்தையாவது நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்க புதிய சட்டத்தால் முடியாது.
அவருக்கு எதிராக அவரது மனைவி விவாகரத்துக் கோரியோ ஜீவனாம்சம் கோரியோ வழக்குத் தொடரவும் முடியாது என அக் காலத்தில் இருந்த முன்னணி இடதுசாரி அரசியல்வாதியான சரத் முத்தெட்டுவேகம ஒரு முறை கூறினார்.
அதன்பின்னர் இம் முறையை எதிர்த்து பலர் போராடியிருக்கின்றனர். சிறிமாவே பண்டாரநாயக்க, கலாநிதி என்.எம்.பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா, மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர, மஹிந்த ராஜபக்ஷ, அனுர பண்டாரநாயக்க, பீட்டர் கேனமன் போன்றோர் அவர்களில் முக்கியமானவரகளாவர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏழு கட்சிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து 1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு உருவாக்கிய ஜனநாயக மக்கள் கூட்டணியின் பொது வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சமாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதே குறிப்பிடப்பட்டு இருந்தது.
இன்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று ஜனாதிபதி முறையை பாவித்து அமைச்சர்களை கைப்பொம்மைகளாக்கி தனிக் குடும்ப ஆட்சியை நடத்துவதாக குற்றஞ்சாட்டப்படுவதைப் போலவே, நிறைவேற்று ஜனாதிபதி முறையை பாவித்து ஜனாதிபதி ஆர். பிரேமதாச, அமைச்சர்களை கைப்பொம்மைகளாக்கி தனிநபர் ஆட்சியை நடத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
அவ்வாறு குற்றஞ்சாட்டிய லலித் அத்துலத் முதலி மற்றும் காமினி திஸாநாயக்க போன்ற அமைச்சர்கள் 1991ஆம் ஆண்டு பிரேமதாஸ அரசாங்கத்திலிருந்து விலகினர். இதன் விளைவாக 1994ஆம் ஆண்டு 17 ஆண்டுகள் நிலத்திருந்த ஐ.தே.க.வின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை தீவிரமாக ஆதரித்த இவர்கள், ஜனநாயக ஐக்கிய தேசிய கட்சியை ஆரம்பித்து நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யும் போராட்டத்தை ஆரம்பித்தனர். 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் பொதுஜன ஐக்கிய முன்னணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது. அதே ஆண்டு நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலிலும் சந்திரிகாவே வெற்றிபெறுவார் என்பது தெளிவாக தெரிந்தது.
இந்த நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தி அதுவரை அந்த முறையை நியாயப்படுத்தி வந்த ஐ.தே.க. தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமது நிலைப்பாட்டை வெளியிட்ட அப்போதைய ஐ.தே.க. தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான காமினி திஸாநாயக்க, சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தால் தாம் அதனை ஆதரிப்பதாக கூறினார்.
இது தம்மிடம் இல்லாத அதிகாரம் மற்றவரிடம் இருக்கக்கூடாது என்ற நோக்கமேயல்லாது வேறொன்றுமல்ல. அதேபோல் தமது வெற்றி நிச்சயமாக இருந்ததால் அதுவரை நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற சந்திரிகா, ஐ.தே.க.வின் ஒத்துழைப்பைப் பெற்று அம்முறையை இரத்துச் செய்ய முன்வரவில்லை. தமக்கு கிடைக்கப் போகும் அதிகாரத்தை விட்டுவிடக்கூடாது என்ற நோக்கமே அதுவாகும்.
ஆயினும், 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதே சந்திரிகாவின் பிரதான வாக்குறுதியாக அமைந்தது. அந்த வாக்குறுதியை பிரதான இரு ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர் தமக்கு எழுத்து மூலமாக தருவதாக இருந்தால், அவருக்கு ஆதரவாக தாம் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நிஹால் கலப்பத்தி கூறினார்.
அதன்படி 1995ஆம் ஆண்டு ஜூலை 15 மே திகதிக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக சந்திரிகா எழுத்து மூலமாக வாக்குறுதியளித்தார்.
ஆனால், பதவிக்கு வந்ததன் பின்னர் சந்திரிகா அந்த விடயத்தில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. அவர் தமது வாக்குறுயை மீறி இரண்டாண்டுகள் பூர்த்தியானதன் பின்னர் 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி ஐ.தே.க. கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. சந்திரிகாவின் அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களை மட்டுமன்றி அங்கிருந்த ஊடகவியலாளர்களையும் கடுமையாக தாக்கி விரட்டியடித்தது.
இங்கு ஒரு சுவாரஸ்யமான விடயம் இருந்தது. அப்போது ஐ.தே.க. நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பான தமது நிலைப்பாட்டை மீண்டும் மாற்றிக் கொண்டிருந்தது.
அதனை இரத்துச் செய்வதற்குப் பதிலாக அதில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதென்ற சந்திரிகாவின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரி அக்கட்சி ஆர்ப்பாட்டம் செய்தது. சந்திரிகாவின் அரசாங்கமும் தமது வாக்குறுதியை நிறைவேற்றக் கோருவோரை அடித்துத் துரத்தியது.
இனப் பிரச்சினையை தீர்ப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு சந்திரிகா, 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி புதிய அரசியலமைபை;பு நகல் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் நிறைவேற்று ஜனாதிபதி முறை இருக்கவில்லை. ஆனால், அளவுக்கு அதிகமான அதிகார பரவலாக்கல் மூலம் பிரிவினைக்கு உதவுவதாகக் கூறி, ஐ.தே.க. அந்த அரசியலமைப்பின் நகல்களை நாடாளுமன்றத்துக்குள்ளேயே தீயிட்டுக் கொழுத்தியது.
இந்த சம்பவத்துக்கு முன்னரும் பின்னரும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய அவசியமான மூன்றிலிரண்டு வாக்குகளை பெறுவதற்காக உதவத் தயார் என ஐ.தே.க. பல முறை கூறிய போதிலும் இனப் பிரச்சினைக்கான தீர்வோடேயே அதனை செய்ய வேண்டும் என்று கூறி சந்திரிகாவின் அரசாங்கம் அதனை நிராகரித்தது.
இந்தப் பின்னணியிலேயே 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது ராஜபக்ஷ வெற்றிபெறுவார் என உறுதியாக கூற முடியாத நிலை காணப்பட்டது. உண்மையிலேயே பிரபாகரனின் தேர்தல் பகிஷ்கரிப்பின் பயனாகவே அவர் அத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்த நிச்சயமற்ற நிலைமை காரணமாக மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளின் உதவி ராஜபக்ஷவுக்கு அத்தியாவசியமாகியது. எனவே, அவர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதென்ற தமது கட்சியின் நிலைப்பாட்டை அழுத்தமான வாக்குறுதியாக வழங்கினார்.
அதேவேளை, அப்போது புலிகளுடனான போர் நிறுத்த உடன்படிக்கையும் அமுலில் இருந்தது. மக்கள் விடுதலை முன்னணி அதனையும் எதிர்த்தது. ராஜபக்ஷவும் அதனை எதிர்த்தார்.
எனவே, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு ராஜபக்ஷவுக்கு கிடைத்தது. ஆனால் வெற்றிபெற்ற ராஜபக்ஷவும் நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் பற்றிய பிரச்சினையை மறந்துவிட்டார். அதனை இரத்துச் செய்ய அவருக்கு போதிய நாடாளுமன்ற பலம் இருக்கவும் இல்லை.
2010ஆம் ஆண்டு போர் வெற்றியோடு ஜனாதிபதித் தேர்தலை நடத்திய ராஜபக்ஷ, அதில் பெரு வெற்றி பெற்று அத்தோடு பொதுத் தேர்தலையும் நடத்தினார். அதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்;க்கப்பட்டது. எனவே அந்த வருடம் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்வதாக வாக்குறுதியளிக்காமல் இருக்க அவர் கவனமாக இருந்துவிட்டார்.
2010ஆம்; ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு ஓரிரு ஆசனங்கள் குறைவாகவே பெற்றது. ஆனால், ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை பலவேறுபட்ட இலஞ்சங்களை வழங்கி வளைத்தெடுத்து, அக்கட்சி தமது அரசாங்கத்துக்கு 162 ஆசனங்களை தேடிக் கொண்டது.
ஆனால், அந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்குப் பதிலாக அரசாங்கம் அம் முறையை மேலும் பலப்படுத்தும் வகையில் 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டது. இப்போது அந்த அதிகாரத்தால் அதற்கு வாக்களித்த அமைச்சர்களே அவமானப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இதுதான் நிறைவேற்ற ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்கான முயற்சிகளின் வரலாறு. எனவே, மக்கள் விடுதலை முன்னணி மைத்திரிபாலவுக்கு ஆதரவளிப்பதில் எச்சரிக்கையோடு செயற்படுவதில் நியாயம் இருக்கிறது.
எம்.எஸ்.எம்.ஐயுப்

No comments:
Post a Comment