ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்ட கையோடு, புலிகளுக்கு உயிரூட்டும் பிரசாரமும் முடுக்கி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது பிரிக்கப்படாத இலங்கையில் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு என்று தலைவர் இரா. சம்பந்தன் எத்தனை தடவை தான் கூறினாலும், பிரிவினை தான் கூட்டமைப்பின் நோக்கம் என்ற பிரசாரத்தினையே மூலதனமாகக் கொண்டு மகிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கப்போகும் திட்டம்
தெளிவாகியுள்ளது. இது தீராத பதவி மோகத்தின் நிமித்தம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் நயவஞ்சகமான பிரசாரமென்பதில் ஐயமில்லை. இது ஒரு வகையான கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்ஷவை ஆதரித்தால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றொரு கருத்தினை அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சா, பசில் ராஜபக்ஷ வெளிப்படுத்தி கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை நிராகரிக்காது, ஆளமாக பரிசீலிக்க முடியும் என்று சம்பந்தன் கருத்துத் தெரிவித்திருந்தார். பசில் ராஜபக்ஷ தெரிவித்த கருத்து இதய சுத்தியானதோ அல்லது திட்ட வட்டமானதோ என்று நோக்கக் கூடியது அல்ல என்றாலும், சம்பந்தன் அதனை உடனடியாகத் தூக்கியெறியத் தலைப்படவில்லை. அதன் பின்பு, சபை முதல்வரும், ஜனாதிபதி ராஜபக்ஷவின் விசுவாசியாக விளங்குபவருமாகிய அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆதரவை கூட்டமைப்பிடம் கோரமாட்டோம், அதற்கான தேவை கிடையாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார். அதே நேரத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் மலையகக் கட்சிகளின் ஆதரவும் மகிந்த ராஜபக்ஷவிற்கு உண்டு என்று கூறிய அமைச்சர் சில்வா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடமும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், அக்கட்சியினர் மகிந்த ராஜபக்ஷவை விட எந்த அடிப்படையில் எதிரணியினருக்கு ஆதரவளிக்க முடியும் என்றும் சற்று ஆதிக்க தொனியில் வினா எழுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அன்று அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தான் 18 ஆவது திருத்தத்திற்கு தாம் ஆதரவளித்ததாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினா, ஹசன் அலி அண்மையில் கூறியதாக அறியக் கிடக்கிறது. எனவே, ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸின் முடிவு ராஜபக்ஷ பக்கம் சாயும் சாயலே தென்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள இத்தருணத்தில், ஊக்குவிப்பு உற்பத்தித் திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகு தாவூத் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு சித்த வைத்திய முகாமை அண்மையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், ஜனாதிபதி ராஜபக்ஷ ஒரு சிங்கள பேரினவாதி என்னும் கருத்துச் சிறையில் சிறுபான்மை மக்கள் சிக்குண்டுள்ளனர் என்று கருத்து தெரிவித்தார். இதனைக் கூறுவதற்கு அவருக்கு என்ன அருகதையிருக்கிறது என்பது புரியவில்லை. அடுத்ததாக, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக கட்சிகள் அதிகளவு பிரயத்தனம் செய்தாலும் கூட, மலையக மக்கள் இனிமேலும் ஏமாரத் தயாராக இல்லாத நிலை தான் சற்று தெளிவாக தெரிகிறது. குறிப்பாக, கொஸ்லந்தை மண்சரிவுப் பிரளயம் அப்பாவி தொழிலாளர்களையும் குடும்பங்களையும் பதம் பார்த்தது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமான மலையக பிராந்தியத்தையே மண்சரிவு அபாயம் உலுக்கிய வண்ணம் உள்ளது. மலையக மக்கள் தம்மை தலைவர்கள் நட்டாற்றில் விட்டுள்ளனர் என்ற பெருங்கவலையில் மூழ்கியிருப்பது கண்கூடு. அமைச்சர் சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மிடுக்குடன் விடுத்துள்ள கோரிக்கை மேலே குறிப்பிட்டது போலவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைக் கோரப்போவதில்லை, அவர்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு வர வேண்டும் என்று சற்று மிடுக்கான தொனியில் அமைச்சர் சில்வா கூறியுள்ளதைக் காண முடிகிறது. அதன்பின்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டு ஒத்துழைக்க முன்வருமாறும் அரசாங்கத் தரப்பிலிருந்து செய்தி ஒன்று வெளியாகியது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் புதிய பொதுச் செயலாளர், அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை தாம் கோரத் தேவையில்லை என்றும், தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். எனவே அரசாங்கத் தரப்பினர் சணம்பித்தம், சணம் வாதம் என்றவாறாக செயற்பட்டு வருவது கண்கூடு. மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளின் வாக்கு வங்கிகள் மிக அற்பமானவை என்பது மட்டுமல்லாமல், ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பில் இக்கட்சிகள் பிளவு பட்டு நிற்கின்றன. இதனிடையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை கைவிடப்போவதில்லை. ஏனென்றால், இலங்கை அரசாங்கத் தரப்பிரனரால் புலிகளின் ஆதரவாளர் என இனங்காணப்படும் புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகள் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாய் உள்ளது என்பது அரசாங்கத்தின் பிரசார ஆயுதமாகும். இந்த நிலையில் தமிழர் பிரிவினைக் கோரிக்கை நீங்கவில்லை, வெளிநாடுகளில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் ஈழக் கோரிக்கையை வைத்து கடுமையாக உழைத்து வருகின்றனர் என்பது மட்டுமல்லாமல், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், மற்றும் அல் ஹசெய்ன் உள்ளிட்ட ஐ.நா. உயர் அதிகாரிகள் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக தீவிரமாக செயற்படுகின்றனர் என்ற படியால், நாட்டின் இறைமைக்கு ஆப்பு வைக்கின்றனர் என்றெல்லாம் சிங்கள மக்கள் மத்தியில் ஆலாய்ப் பறந்து பிரசாரம் செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது மட்டுமல்லாமல், தேர்தல் பிரசாரத்திற்காக, எதுவித தயக்கமும் இன்றி, அரசாங்கம் அரச வளங்களை முழு அளவில் பயன்படுத்தும் என்பதும் பரவலான அபிப்பிராயமாய் உள்ளது. அந்த வகையில் ஏலவே நிறைவேற்றப்பட்டுள்ள 2015 ற்கான வரவு செலவுத் திட்டமும், தேர்தலை மையமாகக் கொண்டது என்பதும் தெளிவாய் உள்ளது. உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தியினூடாகவும் சேமிப்புகள் ஊடாகவும் வருமானத்தை ஈட்டுவதை விடுத்து, குறிப்பாக சீனாவிடமிருந்து அபரிமிதமான கடன்களில் தான் அரசாங்கம் தங்கியிருக்கிறது. இலங்கை சீன உறவுகளைப் பொறுத்தவரை, நக்குண்டார் நாவிழந்தார் என்ற நிலை நிச்சயமாக உருவாகியுள்ளதாகவே ஆய்வாளர்கள் அடித்துக் கூறிவருகின்றனர். வீண் விரயம் மற்றும் ஊழல் தொடர்பாக பொறுப்புக் கூறும் பொறிமுறை எதுவும் கிடையாது, இந்த நாடு இன்னொரு நாட்டிற்கு மிக அதிகளவு கடன் பழுவில் ஆழ்த்தப்பட்டுள்ளது. அது சீனா தான். ஒரு சிலர் பெரும் பண முதலைகள் ஆகி விட்டனர். அதற்கான விளக்கம் எதுவும் கிடையாது என்று ஆங்கில இதழில் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது நாட்டு மக்களின் ஆழ்ந்த கவனத்திற்குரியதாகும். அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் வெளிப்படுத்தியுள்ள கடன் விபரங்கள் இதனை உறுதிப் படுத்துவதாக தெரிகிறது. அதாவது 1971 முதல் 2012 வரை பட்ட கடன் அமெரிக்க டொலர் 5076ஆக இருக்கும் போது, 2005 முதல் 2012 வரைக்கான தொகை 4761 அமெரிக்க டொலர் அல்லது 94 வீதமான கடனாக காணக்கூடியதாக உள்ளது. மற்றும் இலங்கை இன்று நிச்சயமாக சீனாவின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அளவிற்கு, வேறு எந்த கடந்த கால அரசாங்கமும் இந்த நாட்டை இட்டுச் செல்லவில்லை எனவும் காணப்படுகிறது. அந்த வகையில் முதலாளித்துவ ஜனநாயக முறைமை கூட தேய் பிறையாக உள்ளதாகவும் அது நிச்சயமாக குழிதோண்டிப் புதைக்கப்படுவதாகவும் கருதப்படுகிறது. அண்மையில், தம்புள்ளையில் ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய உரையில் முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார். அதாவது, நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தான் ஒரு தவறும் இழைக்கவில்லை எனவும், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மட்டுமே அதனைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கப்பால் வெகுதூரம் சென்றுவிட்டமை மிகத் தெளிவாய் உள்ளது. இன்று அனைத்து அதிகாரங்களுமே ஜனாதிபதியின் கையிலேயே உள்ளன. சட்டவாக்க துறையென்றாலும் சரி, நீதித் துறையென்றாலும் சரி அவரது பிடியிலேயே உள்ளன என்பது கண்கூடு. குறிப்பாக நீதித்துறை சுயாதீனம் இழந்து விட்டமை இந்த நாடு சந்தித்துள்ள பலத்த சாபக்கேடு என்பது பகிரங்க இரகசியமாகும். அத்தோடு சட்ட ஆட்சி காணாமல் போயுள்ளதுடன், தண்டனை விலக்கல் கலாசாரமும் பூதாகாரமாக வளர்ந்துள்ளது. மேலும, 17 ஆவது திருத்தத்தை நீக்கி குறிப்பாக தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்குவதை விடுத்து, இரு தடவைகளுக்கு மேலாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அதிகாரத்தை கையிலெடுப்பதற்காக, 18 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதும் அதற்கு கையாளப்பட்ட சூழ்ச்சிகரமான யுத்திகளும் உலகறிந்த விடயமாகும். உண்மையில், ராஜபக்ஷ குடும்பமே இந்த நாட்டை தொடர்ந்து ஆளவேண்டும் என்ற நிலைப்பாடு காணக்கூடியதாக உள்ளதாகவும், பல்வேறு அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாகவும் அரசியல் நிபுணரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரட்ன உள்ளிட்ட பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்துவிடப் போவதாகவே ஜனாதிபதி ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு தேர்தலின் போது உறுதியளித்திருந்தார். அது ஏமாற்று வித்தை என்பதை அவரே நிரூபித்து விட்டார். 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு கையாண்ட சூழ்ச்சி கரமான நடைமுறைகளை பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் சட்ட பூர்வமாக பெற்றுக் கொள்ளப்பட்டதல்ல. அதாவது, 2010 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 23 பெரும்பான்மை கிடைக்கவில்லை. பின்பு, அமைச்சுப் பதவிகளுக்காக, சந்தர்ப்பவாதிகள் கையாண்ட கட்சித் தாவல்கள் ஊடாகவே 18 ஆவது திருத்தம் நிறைவேற்றுவதற்காக 23 பெரும்பான்மை புனையப்பட்டது. இதுவும் தான் அதிகார துஷ்பிரயோகம் என ஆய்வாளர்களால் இனங்காணப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசு

No comments:
Post a Comment