இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Thursday, December 18, 2014

நல்லிணக்கம் தொடர்பாக எதிரணியும் பொது உடன்பாட்டை எட்டுவது அவசியம்

 வ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது இன்றைய 

நிலைப்பாடும் நய நுட்ப வேற்றுமை கலந்ததாகும். அவர்கள் தொடர்ந்தும் எதிரணியிலேயே இருந்து வந்ததால் கடந்த பத்தாண்டு காலத்தில் அவர்கள் அரசாங்கத்தால் முற்றாகவே ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளனர்.  இதன் காரணமாக  இக் கூட்டமைப்புக்கு
( த.தே.கூ.) வாக்களித்த வாக்காளர் சமூகத்திற்கு இக் கட்சியினரால்  மிகவும் குறைந்த அளவிலேயே ஏதும் செய்யக் கூடியதாக இருந்ததனை வடக்கு, கிழக்கு கிராமங்களுக்குச் சென்று கவனிப்பவர்களுக்கு நன்கு விளங்கும். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
பொது எதிரணியினருக்கு தேர்தலில் ஆதரவளிக்கப் போவதாகக் கூறினர். அதனை அரசாங்கம் ஒரு துருப்பாக கையிலெடுத்து எதிரணியினரை சிங்கள வாக்காளர் மத்தியில் செல்வாக்கிழக்க வைக்கும்  வகையில் அதனைப் பயன்படுத்தும் என்பதால் தாம் அவ்வாறு எதுவித தீர்மானத்தையும் இன்னும் செய்யவில்லை என்றும் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் விளக்கினார்கள். ஆயினும் இவ்வாறாக தமது ஆதரவை தெரிவிக்க தீர்மானம் செய்வதனை தாமதப்படுத்துவதற்கான இன்னுமோர்  காரணமும் இருக்கலாம். அதாவது தமிழ் மக்களது நலன்களை வென்றெடுக்க சர்வதேச ரீதியாக இதுவரை தமிழ்த் தலைமைத்துவங்கள் பெற்றுள்ள சாதக வளர்ச்சிகளை இத் தேர்தலில் 

எதிரணியினருக்கு வெற்றி ஏற்பட்டால் அது  ஏதேனும் பின்னடைவுகளை ஏற்படுத்தி விடலாமோ என்ற அச்சமும் காரணமாக இருக்கலாமோ என்றும் தெரிகிறது. 
தற்போது சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பகத் தன்மையும் நற்பெயர் அல்லது புகழ் என்பனவும் ஒரு கீழ்  மட்ட நிலையிலேயே உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் நடத்தப்படும் யுத்த கால குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக  இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் வருடாந்தக் கூட்டத் தொடர் அடுத்த வருடம்  மார்ச்  மாதம் நடக்கும் போது அவ்விசாரணையின் முடிவுகள் வெளியாகவுள்ளன.  அதன் விளைவாக இலங்கைக்கு எதிராக
( பொருளாதார )  தடைகள் ஏற்படலாம். அதுவும்  குறிப்பாக அரசாங்கத் தலைவர்களுக்கு எதிராக ஏதேனும் தடைகள் வரலாம். எவ்வாறாயினும் இலங்கைக்குப் புதியதொரு அரசாங்கம் பதவிக்கு வருமானால்  இவ்வாறான சர்வதேச அழுத்தங்களின் வேகம்  தணிவடையலாம். அத்துடன் அவ்வாறாக வளர்ந்துள்ள அழுத்தம் தரும் சர்வதேச நிலைவரங்களை மீண்டும் ஒரு குறுகிய காலப் பகுதியில் கட்டியெழுப்புதல் கடினமானதொரு காரியமாகலாம்.



ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் பிரசாரங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கலோடு பெரும் ஆரவாரத்துடனும் அக்கறையுடனும்  ஆரம்பிக்கப்படவிருந்தன. போட்டி மிக நெருக்கமானதும் கடுமையானதுமாகவும் இருக்கப்போவதால் சிறுபான்மையினத்தவரது வாக்குகள் தேர்தல் முடிவுகளை தீர்மானம் செய்வதில் ஆற்றல் உள்ளதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இருந்த போதிலும் பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தாம் எந்த வேட்பாளரை ஆதரிக்கப் போகின்றோம் என்னும் தீர்மானத்தை இன்னும் எட்டாதிருக்கின்றன. அவை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்கள் எவ்வாறு தமது அரசியல் விஞ்ஞாபனத்தை அமைக்க உள்ளனர் என்பதனைப் பொறுத்தே தாம் ஒரு தீர்மானத்தை செய்யலாம் என்று காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிகிறது.
எவ்வாறாயினும் ஆளும் அரசாங்கத்தில் கூட்டுப் பங்காளியாக இருக்கும் அரசியற் கட்சிகள் எதிரணியினரை ஆதரிக்க கருத்து தெரிவிக்க தயக்கம் காட்டலாம். அதனால் உடனடியாகவே அவர்களது பதவிகளை அரசாங்கத்திலிருந்து இழக்க வேண்டி வரலாம் என்பது மாத்திரமன்றி நம்பியவரை ஏமாற்றியதற்காக தேர்தலின்  பின்னர் பழிவாங்கல் ஆளுங் கட்சியினரால் ஏற்படுமோ என்ற அச்சமும்  காரணமாக இருக்கலாம். 
எனவே வெளிநாட்டிலிருக்கும் தமிழர்களில் ஒரு பிரிவினரும் இலங்கை வாழ் தமிழ் மக்களில் ஒரு பிரிவினரும் இலங்கைக்கு ஒரு புதிய அரசாங்கம்  வருமானால் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகத்திடம் இவ்வாறான நிலைமைகளை பயன்படுத்தி கால தாமதத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாகி விடலாம் என்ற கவலையுடனான அக்கறை நிலவுகின்றது. அதேவேளை இலங்கையின் புதிய அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எந்த நியாயத்தையோ அல்லது நிவாரணத்தையோ வழங்கிவிடப் போவதில்லை என்றும் அனைத்து சிங்கள பிரிவுகளுமே இவ்வாறே தமிழ் மக்களைப் பொறுத்து செயற்படுவன என்றும் எண்ணி அங்கலாய்க்கின்றனர். எனவே தான் எதுவித இடைக்கால தடைகளுமின்றி சர்வதேச சமூகங்களின் பொறுப்புக் கூறுவது தொடர்பிலான செய்முறைகள் தொடர வேண்டும் என்பதனையே விரும்புகின்றனர். 
 பொதுவான புரிந்துணர்வு  :
 அரசியலில் தமிழ்க் கட்சியினர் கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கிய போதிலும்  தமது கோரிக்கைகளில் தொடர்ந்தும் தோல்வி ஏற்பட்டிருந்ததனையே அனுபவமாகக் கொண்டிருப்பதால் ஏதேனும் நன்மை ஏற்பட வேண்டுமானால் நிலைமை மோசமடைவதே சிறந்தது என்ற எண்ணம் அப் பிரிவினரிடையே இருப்பதும் சகஜம் தான். தமிழ் மக்களுக்கும் பொதுவாக சிறுபான்மை இனத்தவர்களுக்கும் அவர்களுடைய  நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக  கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்பட்ட பல முயற்சிகள் இடம்பெற்றிருந்திருக்கின்றன.  1957 இல் பண்டா செல்வா ஒப்பந்தத்திலும் பின்னர் 1965 ஆம் ஆண்டில்  செல்வநாயகம்  சேன நாயக்க   ஒப்பந்தத்திலும்  1987 ஆம் ஆண்டு இந்திய  இலங்கை ஒப்பந்தத்திலும் இறுதியாக சந்திரிகா குமாரதுங்கவின் யாப்புப் பொதியிலும் இவ்வாறாக இணக்க அரசியல் நடவடிக்கைகளில் தமிழ்க் கட்சிகள் தமது கூட்டுறவை காட்டியிருந்தனர். இவ் ஒப்பந்தங்கள் யாவுமே இறுதியில் பூஜ்ஜிய நிலைக்கே  சென்றிருந்தன. எனவே தமிழர் ஆதரவுடன் எதிரணி வெற்றியடைந்தால் வரலாறு மீண்டும் பழையனவற்றையே திரும்பக்  கொண்டு வரலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. 
 எவ்வாறாயினும்  2005 ஆம் ஆண்டு அனுபவம் ஒத்துழைப்பு இல்லாது போனால் அரசியலில் மிகவும் மோசமான விளைவுகளே ஏற்படும் என்பதனையே உணர்த்துகின்றது. அப்போது தமிழீழ விடுதலைப் புலியினர் தமிழ் மக்களை ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு  ஊக்குவித்தனர். ஆனால்,  எதிரணி போட்டியாளராக விருந்த ரணில் விக்கிரம சிங்கவை அரசாங்க வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷவினால் வென்றுவிடக் கூடியதாயிற்று. அதன் மூலம் சிங்கள அரசின் அதிகார அரசியல்  போராட்டத்தில் பங்கு கொள்ள தமிழ் அரசுக்கு எதுவித காரணமும் இல்லை என்பதனை எடுத்துக் கூறுவதே நோக்கமாக இருந்தது. ஆனால் இறுதியான ஒரு வேறான உள்நோக்கமும்  இருந்திருந்தது. அதனை விடுதலைப் புலிகள் வெளிப்படையாகக் கூறவில்லை. மாறாக தமது கருத்துகளை தமிழ் மக்கள் மத்தியில் திணிக்க துப்பாக்கி  சக்தியையே பயன்படுத்தினர். அப்போதைய அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட  அதன் சிங்கள தேசியத்துவ ஈடுபாட்டின் காரணமாக சர்வதேச ஆதரவினை இழந்துவிடலாம் என்றும் அது தமிழர்களின் நோக்கங்களை அடைய சாதகமாயிருக்கும் என்றும் எண்ணினர்.  ஆனால் , நடந்ததோ வேறு. அது இறுதியில் பெரும் அழிவினைத் தரும் தவறாக மாறியது. 
 அனைத்து அரசியல் பிரச்சினைகளையும் திறந்த முறையில் தேர்தல் பிரசாரங்களின் போது பேச முடியாதிருக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள முடியும். சில பிரச்சினைகள் அரசியல் ரீதியாக பார்க்கும் போது பெரிதும் உணர்வு பூர்வமானதாகவும் முரண்பாடானதாகவும் இருக்கின்றன. இருந்த போதிலும் குறிப்பாக இரண்டு பிரச்சினைகள் தொடர்பில் குறைந்த பட்சமாக தத்துவங்களின் அடிப்படையிலாகவாவது  புதிய அரசாங்கத்தை அமைக்கு  முன்னர் ஒரு உடன்பாடு போட்டியிட்டுக் கொண்டிருக்கும் குழுக்களிடையே  தேவையாக  உள்ளது. தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம்  தனது கவனத்தை செலுத்த வேண்டியதாக புதிய எதிர்பாராத பிரச்சினைகள் தோன்ற முடியும். அந்நிலையில் செயல் நடவடிக்கைகள் மட்டுமே தேவையே ஒழிய, அப்போது தமது கருத்துகளை விவாதித்துக் கொண்டிருக்க முடியாது.  இலங்கையின் எதிர்காலத்தைப் பொறுத்த இரண்டு பிரச்சினைகள் .
1. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய தேர்தல் பிரசாரம்.
2.  யுத்தக் குற்றங்கள்  பற்றிய சர்வதேச விசாரணை என்பனவாகும். 
 இத்தகைய நிலையில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமைத்துவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பொதுவான தமது எதிரணி பிரசாரத்தில் வந்து இணையுமாறு பிரசாரத்தின் ஆரம்ப கால கட்டத்திலேயே அறிக்கை விடுத்திருப்பது ஒரு சாதகமான அபிவிருத்தியாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பொது  எதிரணி வேட்பாளரை ஆதரிக்கும்படி ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார். எதிரணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரு தேசிய கூட்டு அரசாங்கத்தை அமைக்கவே ஐக்கியப் பட்டிருக்கின்றன.  இது ஒரு சிங்கள  பௌத்தர்களது அரசாங்கமல்ல. நாட்டில்  இப்போது மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், சிங்கள , தமிழ் , முஸ்லிம்கள் யாவருக்கும் பொதுவானது. எதிரணியினர் தமது அடையாளம் ஒரு பரந்துபட்ட நோக்கத்திலானது  என்பதனை எடுத்துக் காட்ட இப்போது  எடுத்துள்ள நிலைப்பாடே சிறந்தது. எனவே முதலாவது பிரச்சினையான தமிழ் சிறுபான்மை இனத்தவரது பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வுகாண   அடிப்படைத் தத்துவங்களை எதிரணி கட்சிகள் இனங்கண்டு அவற்றின் அடிப்படையில்  தீர்வுகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதான உறுதிமொழியை வழங்க வேண்டும். 
 எதிரணியின் பணிகள் :
 ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுத்துச் செல்லப்படும் யுத்தக் கால குற்றங்கள் பற்றிய  பிரச்சினை விவாதிக்கப்பட வேண்டிய  இரண்டாவது பிரச்சினையாகும். இவ்விசாரணை இப்போது அதன் முடிவுகளை அடையும் நிலைவரை வளர்ந்துள்ளது.  எதிரணி பொது வேட்பாளர் உட்பட்ட எதிரணிக் கட்சிகள்  இலங்கை அரசாங்கத் தலைவர்களையும் இராணுவத்தினையும் சர்வதேச யுத்த குற்றங்கள் பற்றிய விசாரணையின் முடிவுகளில் இருந்து  பாதுகாக்க அனைத்தையும்  செய்யப் போவதாக பொதுமேடைகளிலேயே தமது அர்ப்பணிப்பை எடுத்துக் கூறியுள்ளனர். நாடு முன்னோக்கிச் செல்ல தமிழீழ விடுதலைப் புலிகளை அனைத்துப் பக்கவிளைவுகளையும் புறக்கணித்து முன்னோக்கிச் சென்று இராணுவ ரீதியாக வெற்றியடைவதே அத்தியாவசியமானது என்பதனை நாட்டின் பெரும்பாலான மக்கள் அங்கீகரித்து தமது ஆதரவிற்கு உறுதி கூறி வந்துள்ளனர். அதன் காரணமாக அவ்வுணர்வுகள் அவர்களிடம் இன்னும் நிலவுகின்றன.
இருந்த போதிலும் யுத்தத்தினால் தமது அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் போன்ற தரப்பினர் கடந்த காலத்தை மறந்து விடுமாறு கூறப்படும் தற்போதைய  நிலைமைகளினால் அதிருப்தியடைந்தவர்களாக உள்ளனர். இவ்வாறான பிரிவினரில் பலரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். 
 சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளை கோரி நிற்கும் தீவிரமான ஒரு நிலைமையையும் கடந்த காலத்தில் நடந்தவற்றை முற்றாவே மறுத்துவரும் மற்றொரு நிலைமையையும் விடுத்து வெறுமனே சமரசம் செய்து கொள்வது மட்டுமே அல்லாத ஒரு நடு வழியைப் பின்பற்ற வேண்டிதே அத்தியாவசியமான இன்றைய தேவையாகும். யுத்த காலத்தில் இலங்கையில் நடந்தவை பற்றி ஆவன செய்ய வேண்டியதும் அவசியமானதாகும்.
மனித உரிமைகளை  பெரியளவில் மீறியதான முரண்பாடுகள் நிலவியமையினை ஒத்த பிரச்சினைகள் காணப்பட்ட  ஏனைய நாடுகளும் உண்மை,  நீதி, பொறுப்புக் கூறுதல் தொடர்பிலான பிரச்சினைகளை எதிர் கொண்டிருந்தன. இவை தொடர்பில் இலங்கையில் மட்டுமே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டதாகக் கூறி விட முடியாது. அதன் காரணமாக இலங்கைக்கு இவைத் தொடர்பில் பல சர்வதேச அனுபவங்களைப் பற்றி அறிந்து  அவை பற்றி கற்றுக் கொள்ளவும் தேவையான உதவிகளை பெற்றுக் கொள்வதற்குமான வாய்ப்புகள் உள்ளன. 
 யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க  பிரச்சினைகளை கையாளுதல் பற்றி இலங்கை ஜனாதிபதி உதவிகோரி  தென்னாபிரிக்க அரசாங்கத்திடம்  ஒருவருடத்திற்கு முன்னர் கோரிக்கை விடுத்த போது அவர்களும் அதற்கு சாதகமாகவே பதிலளித்தனர். அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகளுடன் பெருமளவுக்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த   இலங்கைத் தலைவர்களில் இவ்விடயம் பொறுத்து உடனடியாகவோ அல்லது சிறிது காலம் சென்ற பின்னரோ ஆவன செய்ய வேண்டும் என எண்ணியவர்களால் இச் செய்முறை வழிநடத்தப்பட்டு வந்தது. இம்முயற்சி தொடர்பில் அப்போது இலங்கைக்கு தென்னாபிரிக்க உ தவி ஜனாதிபதி சிறில் ரமாபோச வந்து சென்றமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொன்றாகும். ஆயினும்  இது தொடர்பிலான செய்முறைகளில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட முடியாது  போனமை அல்லது விரும்பாது போனமை பெரிதும் துரதிர்ஷ்டவசமானதாகும். ஆனால், அது இன்னும் பெரியளவுக்கு காலம் தாழ்ந்து போய்விடவில்லை.
இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் பின்னரான  நல்லிணக்க முயற்சிகளுக்கு தென்னாபிரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன்  மேற்கொண்ட செய்முறைகளை தொடர்ந்து செயற்படுத்த இன்னும் வாய்ப்புகள் உள்ளன. இவை தொடர்பில் தேர்தல் தொகுதிகளிடம் எதிரணியினர் தாம் ஆவன செய்யப் போவதாக வாக்களித்திருப்பதால் அரசாங்கத்தின் மீது மட்டும் இதற்கான பொறுப்பைத் தள்ளிவிடாது எதிரணியினர் தாமும் இப் பிரச்சினை  தொடர்பில் ஒரு உடன்பாட்டை எட்டுவது என்பது அவர்களுடைய கரிசனைகள் தொடர்பிலும் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்.

கலாநிதி ஜெகான் பெரேரா

No comments:

Post a Comment