முதல் முறையாக தற்போதுள்ள ஜனாதிபதி மூன்றாம் தவணை பதவி நாடுவதனால் மட்டுமல்லாது, இதுவே அரசியல் அமைப்பின் பதினெட்டாம் சீர்திருத்தத்திற்குப் பின்னர் நடைபெறும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் என்பதினால் 2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுகின்றது. வாக்குரிமையானது மக்களின் அடிப்படை உரிமை மட்டுமல்லாது மக்களின்
இறையாண்மையின் முக்கிய பாகமாக காணப்படுவதை மனதில் நிறுத்தி அந்த உரிமையினைப் பாதுகாக்க வெள்ளிக் கருத்துக்களம் பின்வருவோருக்கு அழைப்பு விடுக்கின்றது. தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் அவரது திணைக்களத்தில் உள்ள அலுவலகர்கள் தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல்கள் திணைக்களத்தின் அலுவலகர்கள் மற்றும் தேர்தல்களை நடத்துவதுடன் தொடர்புடைய அனைத்து பொது அலுவலகர்களும் தேர்தல் சட்டங்களை சுதந்திரமாகவும் பக்கச் சார்பற்ற ரீதியில் அமுல்படுத்த வலியுறுத்தப்படுகின்றதோடு குறிப்பாக அரசியல் அமைப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் போன்ற சட்டங்களை மீறுவதில் இருந்து தடுக்க பொருத்தமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தப்படும் முறை , கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பெறுபேறுகளை வெளிப்படுத்தல் போன்றவை ஒருமைப்பாட்டுடனும் நேர்மையாகவும் நடத்தப்படுவதன் மூலம் பெறுபேறுகளும் பக்கச்சார்பற்ற தன்மையும் கேள்வி கேட்கப்படாத வகையில் அமைய வேண்டுமென்று நாம் தொடர்புடைய அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றோம். பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் பல தேர்தல்களில் பொலிஸின் பணி கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின் பதினெட்டாம் திருத்தச் சட்டம் பொலிஸின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்திற்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் தற்போதைய செயலாளரின் நியமனம் தேர்தல்கள் காலத்தின் போது பொலிஸாரின் நெகிழ்வுத் தன்மையை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற கருத்து இருந்து வருகின்றது. மக்களுக்கான தமது பணியை எடுத்து நடத்தும் போது குறிப்பாக வெட்டுப் படங்கள் மற்றும் சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்தல் குறித்த தேர்தல் சட்டங்களை செயற்படுத்தும் போது தவறு செய்பவர்களை கட்சித் தொடர்பு பாகுபாடு இல்லாமல் பதிவேடுகளுக்குக் கொண்டு வர அரசியல் தலையீடுகளால் பின்னடையக் கூடாது என்று பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸிற்கு வலியுறுத்துகின்றோம். தற்போதைய ஜனாதிபதி , பொது எதிர்க்கட்சி வேட்பாளர் மற்றும் அனைத்து இதர வேட்பாளர்கள்: தேர்தலில் ஜனாதிபதி , பொது எதிர்க்கட்சி வேட்பாளர் மற்றும் அனைத்து இதர வேட்பாளர்களும் சட்டத்திற்கு கட்டுப்படுவதோடு அவர்களது ஆதரவாளர்களையும் முகவர்களையும் அதே வண்ணம் செயற்பட வலியுறுத்துமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். பிரசாரத்தின் போது அரசாங்க சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் இலஞ்சம் அல்லது சலுகையளிப்பிற்கு வழிவகுக்கக் கூடும் ஊழல் செயல்களில் ஈடுபட பயன்படும் எந்தவொரு அதிகாரத்தையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். செயற்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்களை , உத்தேசத் தினங்களோடு பகிரங்கமாக வெளிப்படுத்தவும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் பிரகடனத்தை வெளியிடவும் வேட்பாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். அனைத்திற்கும் மேலாக தேர்தல் பிரசாரத்தின் போது இனங்கள் மற்றும் மதக் குழுக்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்விற்கு ஆபத்து ஏற்படாதிருப்பதை வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் உறுதி செய்ய வேண்டிய தேவையினை நாம் வலியுறுத்துகின்றோம். ஏற்றுக் கொள்ள முடியாத கடுமையான அறிக்கைகளை மேற்கொள்வதில் இருந்து தவிர்க்குமாறு நாம் அவர்களையும் ஆதரவாளர்களையும் வலியுத்துகின்றோம். ஊடக நிறுவனங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு , லேக் ஹவுஸ் செய்தித் தாள் குழு மற்றும் தனியார் ஊடகங்கள், தேர்தலின் போது அனைத்துக் கட்சிகளுக்கும் சமத்துவமான பிரசாரத்தை வழங்க வேண்டும் என்றும் தேர்தல் பிரசாரம் குறிக்கோளைத் தழுவி இருப்பதையும், அவதூறான மற்றும் கடுமையான அறிக்கைகளுக்கு பிரசித்தம் வழங்குவதில் இருந்து தவிர்க்க வேண்டுமென்று நாம் வலியுறுத்துகின்றோம். ஆளும் கட்சியின் வேட்பாளருக்கு சாதகமாக அரசாங்க ஊடகங்கள் தவறாக பயன்படுத்தலாகாது. பொது மக்கள் அங்கத்தவர்கள் , சிவில் சமூகத்தினர் மற்றும் அடிமட்டத் தலைவர்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட தேர்தல்களுள் மிகவும் தீர்க்கமான தேர்தலாக தற்போதைய தேர்தல் அமையலாம் என்பதோடு பொது மக்களுக்கு இதில் முக்கிய பங்குண்டு என்பதை மனதில் கொள்ளுமாறு நாம் சிவில் சமூகம் மற்றும் அடிமட்ட தலைவர்கள் உள்ளடங்கலாக அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம. சட்ட விதியைப் பேணவும் தேர்தல்கள் சட்ட மீறல்களை எதிர்க்க முன்னெச்சரிக்கையாக செயற்பட உறுதி செய்ய விழிப்புணர்வுடன் இருக்குமாறு நாம் பொது மக்களின் அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஒவ்வொரு வேட்பாளரினதும் பிரசாரம் நடத்தப்பட்ட முறை, தேசத்தின் நீண்ட கால அக்கறைகள், ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்து குடியாட்சிக்கு காப்பளிக்கும் ஆட்சியமைப்பை உறுதி செய்யும் விதம், எமது பல்லின சமூகத்தில் சட்ட விதி, மனித உரிமைகள், சமத்துவம், நீதி, ஊடக சுதந்திரம், சகிப்புத் தன்மை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்தல் போன்றவற்றை கருத்திற் கொண்டு தேர்தல்கள் தினமன்று வாக்களிப்பதில் இருந்து விலகிக் கொள்ளாமல் அனைத்து வாக்காளர்களும் தமது வாக்குரிமையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் வலியுறுத்துகின்றோம். நிறைவு நல்லாட்சி , சட்ட விதியினை பராமரித்தல் மற்றும் இதர சிவில் சமூக எதிர்பார்ப்புகள் போன்றவற்றின் முன்னுரிமையினை அடிப்படையாகக் கொண்டே வெள்ளிக் கருத்துக்களத்தின் இந்த அறிக்கை அமைகின்றது. கடந்த எட்டு தசாப்தங்களிற்கும் மேலாக எமது மக்கள் அனுபவித்து வந்த வாக்குரிமையினையும் அதனது சுயாதீன மற்றும் பொறுப்புள்ள நடவடிக்கையில் எமது எதிர்காலச்சந்ததியினரின் எதிர்பார்ப்பும் தங்கியுள்ளதால் இந்த வாக்குரிமையினை பேணிப் பாதுகாக்க அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

No comments:
Post a Comment