
செய்துள்ளார். இவ்வாறான நிலையில் தமிழர்களுக்கு எதிராக நான் எப்படிஇருக்க முடியும். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பேட்டியின் கேள்வி, பதில் வடிவம்... கேள்வி: இலங்கை இந்திய உறவு பற்றி முதலில் கேட்க விரும்புகின்றேன். நீங்களும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மிகுந்த நல்லுறவை கொண்டிருப்பதாக தெரிகின்றது. மற்ற தலைவர்களைவ pட இருவரும் குறுகிய காலத்துக்குள் பல தடவைகள் சந்தித்துப்பேசியுள்ளீர்கள். தங்களுக்கும் மோடிக்கும் உள்ள உறவு பற்றி விவரியுங்கள்.. ஜனாதிபதி: ஆம் நாங்கள் பலமுறை சந்தித்து பேசியிருக்கின்றோம். எங்கள் இருவருக்கும் நமது இரு நாடுகள் பற்றி ஒத்த பார்வை உண்டு. இதுவே எங்கள் உறவை வலுப்படுத்தியுள்ளது. இந்த உறவு பல விடயங்களில் தொடரும் என்று நான் நம்புகின்றேன். கேள்வி: சமீபத்தில் சார்க் மாநாட்டின் போது நீங்களும் மோயும் சந்தித்தீர்கள் இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கையாக இது கருதப்பட்டது மீனவர்களும் வரவேற்றார்கள். ஆனால், பிரச்சினை முடிந்தபாடில்லை, மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தாக்குதல் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீண்டகால பிரச்சினை எப்படி தீர்க்கப்படவேண்டும் என்று கருதுகின்றீர்கள்? ஜனாதிபதி: பிரதமர் மோடியை நான் சந்தித்த போது அவர் மேற்கொண்டிருக்கும் அயலுறவுக்கொள்கைக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். நமது இருநாட்டு கொள்கை வலுபெறும் வண்ணம் அவர், அயலுறவுக்கொள்கைளை வலுப்படுத்தியுள்ளார். இதுவே, மீனவர்களை விடுதலை செய்வதற்கு முடிவெடுக்க காரணமாய் இருந்தது. மீனவர் பிரச்சினையை மனிதாபிமானதோடு அணுகவேண்டிய பிரச்சினையாகவே நான் பார்க்கின்றேன். மீன';வளத்துறை அமைச்சராக நான் இருந்த காலத்திலிருந்தே இதுதான் என் பார்வை. அந்த காலக்கட்டத்தில் நான் பலமுறை இந்தியா சென்றிருக்கின்றேன். உங்களுடைய அமைச்சர்களை பல முறை சந்தித்து, பறிமுதல் செய்யப்பட்ட எங்களுடைய படகுகளை விடுவிக்க கோரிக்கை விடுத்திருக்கின்றேன். எனது பார்வையில் இது மனிதாபிமானதோடு அணுகவேண்டிய பிரச்சினையாகும். மீனவர்களுக்கு எல்லை தெரியாது. கேள்வி: அது சரி மீனவர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. கைதுகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றனவே? ஜனாதிபதி: நான் இதனை மறுக்கின்றேன். தாக்குதல்களுக்கும் எங்களுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. யாரையும் தாக்கக்கூடாது என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளோம். எனவே, தாக்குதல் நடக்காது இவையெல்லாம் கட்டுக்கதைகள். கேள்வி: வடக்கு மாகாணத்தில் கட்டமைப்பு ரீதியில் அபிவிருத்திகள் நடந்திருந்தாலும் கூட தங்கள் தலைமையிலான மத்திய அரசு மாகாண அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் ஆளுநர் தனி நிர்வாகத்தை நடத்துகின்றார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மத்திய தலையீடு இல்லாத மாகாண நிர்வாகம் என்ற நிலை இன்னமும் வரவில்லை என்றே தோன்றுகின்றது. இதை மறுக்கின்றீர்களா? ஜனாதிபதி: முற்றிலும் மறுக்கின்றேன். மாகாண அரசுக்கு எதனையும் செய்வதற்கு சுதந்திரமுண்டு. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் செய்யமாட்டார்கள். மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றால் போல செயற்படமுடியாததால் அவர்கள் தங்களது இயலாமையை சொல்லமாட்டார்கள். ஆகையால் எங்கள் மீது ஆளுநர் மீதும் பலிபோடுகின்றார்கள் அவர்( முதலமைச்சர்) நினைத்தால் செய்ய முடியும் நாங்கள் நிதியொதுக்கி அனுப்புகின்றோம். முடிவெடுப்பது அவர்கள். ஆளுநரால் முடிவெடுக்க முடியாது ஒப்புதல் மட்டுமே அளிக்கமுடியும். எவ்விதமான முன்னேற்றமும் செய்யாது பண விநியோகம் மட்டும் செய்தால் ஆளுநர் அதற்கு அனுமதிக்கமாட்டார். அரச ஊழியர்கள் பதில் கூறுவதற்கு கடமைப்பட்டவர்கள். அரசியல்வாதிகள் வருவார்கள் போவார்கள். ஆனால், பணி ஓய்வுக்கு பிறகுகூட அரச அதிகாரிகள் பதில் கூற கடமைப்பட்டவர்கள் அதனால் அரச ஊழியர்கள் மிகவும் கவனத்தோடுதான் செயற்படுவார்கள். மாகாண சபை பொறுப்பேற்றதும் வைக்கப்பட்ட முதல் கோரிக்கையே ஆளுநரையும் தலைமைச்செயலாளரையும் மாற்றுவது தான். தலைமைச்செயலாளர் அந்த பிரதேசத்தை சேர்ந்த ஒரு தமிழ் பெண்மணியாவார். கேள்வி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு இந்த உரிமை கூட இருக்கக்கூடாதா? ஜனாதிபதி: எது கேள்வி: பணிமாற்றம் மற்றும் நியமனம் சார்ந்த உரிமை? ஜனாதிபதி: அவரால் முடியாது... முடியாது... எங்களது அரசியலமைப்பின் பிரகாரம் அவரால் அப்படி செய்யமுடியாது. நிமிக்கும் அதிகாரம் என்னிடத்தில் தான் உள்ளது. இந்த தலைமைச்செயலாளர் நீண்ட அனுபவம் கொண்டவர். அந்த நேரத்தில் அந்த பதவிக்கு தகுதியுடைய ஒரே நபர் அவர். அவர், முதலாம் தர அதிகாரியாவார். இந்த காரணத்தால் அவர், நீதிமன்றத்தை அணுகினார். அவரை நான் நியமித்ததை கேள்விக்குள்ளாக்க முடியவில்லை. அரச ஊழியர்கள் கட்சி சாராதவர்கள். இந்த தலைமைச்செயலாளர் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தமிழர். அந்த கோரிக்கை அரசியல் கோரிக்கையாகும். நினைத்தப்படியெல்லாம் அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்யமுடியாது. மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் அரச ஊழியர்களுக்கான சட்டங்கள் எல்லாம் இங்கு இருக்கின்றன. கேள்வி: வடக்கின் அபிவிருத்திகளை மட்டும் பேசினீர்கள் ஆனால் வெறும் அபிவிருத்திகள் மட்டும் போதாது. ஜனாதிபதி: ஆம் நாங்கள் கட்டமைப்புக்கு மட்டும் 450 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டிருக்கின்றோம். வீதிகளை அமைத்திருக்கின்றோம். பாதைகளை அமைத்திருக்கின்றோம் 24 மணிநேரமும் மின்சாரத்தை கொடுத்திருக்கிறோம். தண்ணீர் வசதிக்கு ஒரு திட்டமுள்ளது. ஆனால், அந்த பகுதி மாகாண சபை உறுப்பினர்கள் அதனை எதிர்க்கின்றனர். கேள்வி: ஏன்? ஜனாதிபதி: இல்லை.. இல்லை... இதனை செய்யக்கூடாது என்கின்றனர். அதனால், அவற்றை நிறுத்தவேண்டியதாயிற்று . கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரை தண்ணீர் கொண்டு செல்வதுதான் திட்டம். கிளிநொச்சி அரசியல்வாதிகள் இதனை எதிர்க்கின்றனர். ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்துகின்றனர். முதலமைச்சரால் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் பாதிக்கப்படுவது யார்? அந்த பகுதி மக்கள் தான். நாங்கள் அங்கில்லை இங்குதான இருக்கிறோம். ஆனால், மக்கள் பாதிக்கப்படுவார்கள். முதலமைச்சரும் அந்த பகுதியை சேர்ந்தவர்தான். கேள்வி: நீங்கள் தமிழர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் எதிரானவர்கள் என்ற பொதுவான பார்வை உள்ளது. ஜனாதிபதி: நான் எப்படி தமிழர்களுக்கு எதிராக இருக்க முடியும். என் அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்களை கேட்டுப்பாருங்கள் எம்.பிக்களை கேளுங்கள். என்னால் தமிழர்களுக்கு எதிராக நடக்க முடியாது. என் உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத்தமிழர் ஒருவரை திருமணம் செய்திருக்கின்றார். மற்றும் ஒருவர் கண்டியைச்சேர்ந்த மலையகத்து இஸ்லாமியரை திருமணம் செய்துள்ளார். இரு ஒரு சிறிய நாடு, சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்களுக்கிடையில் கலப்பு திருமணம் இங்கு சகஜம். நான் இந்த நாட்டின் ஜனாதிபதி நான் அனைவரையும் ஒன்றாகவே கருதுகின்றேன். மதம், ஜாதி மற்றும் இனத்தின் அடிப்படையில் என்னால் பாகுபாடு காட்டமுடியாது. வாக்குகளுக்காகவும் மக்களை எங்களிடமிருந்து பிரிக்கவேண்டும் என்பதற்காகவும் எதிர்க்கட்சிகள் எங்கள் மீது புழுதியை வாரி வீசுகின்றன. கேள்வி: ஒரு சுவாரஸ்யமான ஜனாதிபதி தேர்தலை இலங்கை சந்திக்கின்றது உங்கள் அமைச்சரவையில் பணியாற்றிய ஒருவர் உங்களுக்கு எதிராக களமிறங்கியுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையுள்ளதா? ஜனாதிபதி : மிகுந்த நம்பிக்கையோடு இருக்கின்றேன். இல்லையென்றால் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கமாட்டேன். எனது பதவிக்காலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதம் இருக்கின்றன. அந்த இரண்டு ஆண்டுகளை தியாகம் செய்து நான், தேர்தலை சந்தித்திருக்கின்றேன். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் முன்கூட்டியே தேர்தலை சந்தித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளார். எனக்கும் நம்பிக்கையுள்ளது நிச்சயம் வெற்றியீட்டமாட்டேன். கேள்வி: அரசியல் சீர்திருத்தத்தை முன்னிறுத்தும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கின்றன? ஜனாதிபதி: ஒருங்கிணைந்த எதிரணியா? யார் இவர்கள்? ரணில் விக்ரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி தான் இதில் பிரதான கட்சியாக இருக்கின்றது. பிரதான எதிர்க்கட்சிக்கே ஒரு ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுத்து கொள்ள முடியவில்லை என்றால் பாருங்களேன். ரணில் விக்ரமசிங்க ஏன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஏன் ஒருவரை நிறுத்துகின்றார். அவர் இப்படிசெய்வது இது முதலாவது முறையல்ல. இரண்டாவது முறையாகும். முதலாவது முறை எனது இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை நிறுத்தினார். தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அவரை தான் ஆதரித்தனர் அவரும் தோல்வியடைந்தார். இம்முறை எனது கட்சியின் செயலாளரை வேட்பாளராக நிறுத்தியிருக்கின்றார்கள். எப்படி தரம் தாழ்த்தியிருக்கின்றார்கள் என்று பாருங்கள். பொது எதிரணியில் ஐக்கிய தேசியக்கட்சிதான் ஒரே கட்சி ஏனையவர்கள் தனிதனி நபர்களாவர். இவர்களால் ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தை கூட போடமுடியவில்லை. தனித்தனியே ஒப்பந்தம் செய்கின்றார்கள். தமிழ்தேசியக் கூட்டமைப்பு தனியாகவும் ஐக்கிய தேசியக்கட்சி தனியாகவும் ஹெல உறுமய தனியாகவும் ஏனைய கட்சிகளும் தனிநபர்களும் தனித்தனியாகவும் ஒப்பந்தங்களை செய்துள்ளனர். கேள்வி: எதிரணியில் ஐக்கியமில்லை என்று கூறுகின்றீர்களா? ஜனாதிபதி: எந்த ஒற்றுமையும் இல்லை. ஜனாதிபதியின் அதிகாரத்தை மாற்றியமைப்போம் என்ற ஒற்றைகோஷத்தோடு ஒன்று சேர்ந்தார்கள் அந்த நிலைப்பாட்டையும் மாற்றிவிட்டார்கள். கேள்வி: உங்கள் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிரணியை ஆதரிக்கின்றார். அதில் உங்களுக்கு கவலையில்லையா? ஜனாதிபதி: இல்லை... இல்லவே இல்லை நான் அவரை வரவேற்கின்றேன். அவரோடுதான் எனக்கு போட்டி அவர், எதிரணியில் முன்னிற்கின்றார். எதிர்க்கட்சி தலைவர் அல்ல. எல்லாவற்றுக்கும் சந்திரிகா தான் பதிலளிக்கின்றார். அவர் தான் எனது எதிர் வேட்பாளர். கேள்வி: அவர் உங்கள் கட்சி ஸ்தாபகரின் மகள்? ஜனாதிபதி: சரியானது கேள்வி: கவலையளிக்கவில்லையா? ஜனாதிபதி: இல்லை இல்லவே இல்லை. கேள்வி: இலங்கையில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையக தமிழர்கள் வாழ்கின்றார்கள். உங்கள் ஆட்சியின் கீழ் இந்த சமூகம் எந்தளவுக்கு பயணடைந்திருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்? ஜனாதிபதி: எந்த அரசும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவர்களை கவனிக்கதொடங்கினோம். அவர்களை கவனிக்கும் பொறுப்பை மற்றைய அரசுகள் மலையகத்திலுள்ள நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் அதனை செய்யவில்லை. நாங்கள் ஏற்கெனவே கூறியது போல மலையகத்திலும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம். கேள்வி: உங்கள் அரசாங்கத்தில் இருந்த சில அரசியல் வாதிகள் கட்சி மாறியிருக்கின்றனர். இந்த நிலைமையை எப்படி பார்க்கின்றீர்கள்? ஜனாதிபதி: அது இயல்பானது, அவர்கள் இங்கும் அங்கும் மாறி மாறி வருவார்கள் போவார்கள், பிரதானமானவர் ஆறுமுகன் தொண்டமான். அவரது கட்சி எங்கள் பக்கமே இருக்கின்றது. கேள்வி: மலையக மக்களின் ஆதரவு தக்கவைக்கப்படும் என்று நம்புகின்றீர்கள். ஜனாதிபதி: ஆம் .. சென்ற முறையை விடவும் கூடுதலாக பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. கேள்வி: எந்த வகையிலும் வாக்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதா என்ன? ஜனாதிபதி: இல்லை கேள்வி: வடகில் உள்ள தமிழர்களின் ஆதரவை பெறமுடியுமென கருதுகின்றீர்களா?ஏனெனில் அண்மையில் நடந்த மாகாண சபைத்தேர்தலில் அவர்கள் உங்கள் கட்சியை நிராகரித்தார்கள். ஜனாதிபதி: அவர்களுள் பெரும்பாலானோர் படித்தவர்கள், இளைஞர்கள் , எதிர்காலத்தைபற்றி யோசிப்பவர்கள் சென்ற முறையை விடவும் அதிகமான வாக்குகளை பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. சென்ற முறை 18 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரையிலும் வாக்குகளை பெற்றேன். இம்முறை 30 சதவீதத்திலிருந்து 35 சதவீதம் வரை வாக்குகளை பெறுவேன். கேள்வி: வடக்கு மாகாண சபைத்தேர்தல் உங்கள் கட்சியினால் சோபிக்க முடியாத நிலையில், இந்த தேர்தலில் அது சாத்தியமாகுமா? நிலைமை மாறிவிடுமா? என்ன? ஜனாதிபதி: உங்களுக்கு தெரியுமா நான் ஒரு காரணத்துக்காகவே வடக்கு மாகாண சபைத்தேர்தலை நடத்தினேன். எனது கட்சியினருக்கு அது பிடிக்கவில்லை. எங்கள் எம்;.பிகளுக்கும் அதில் விருப்பமில்லை. இவ்வளவு சீக்கிரம் தேர்தல் வேட்டாம் என்றார்கள். ஆனால்... நான் தேர்தலை நடத்தவேண்டும் என்றேன். அந்த தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவார்கள் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதன் பின்னர் மக்கள் உணர்வார்கள் என்று நான் தெளிவுப்படுத்தினேன். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு பல விடயங்களை பேசுபவர்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்தால் அவர்களால் திறம்பட செயற்படமுடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். கேள்வி: நீங்கள் தேர்தல் பிரசார கூட்டங்கள் மற்றும் பொது கூட்டங்களில் தமிழில் பேசியதுண்டு. ஆனால், ஐ.நா.வில் பேசியதன் நோக்கம் என்ன? ஜனாதிபதி: இலங்கையில் உள்ளவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கற்கவேண்டும். நான் தமிழ்மொழியை கற்க விரும்புகிறேன் நான் இன்னும் ஒரு தமிழ் மாணவன். இது நல்ல எண்ணத்தின் அடிப்படையிலான செய்கையாகும்.ஒரு தலைவர் என்னை சிங்களத்தில் பேச சொன்னார் இங்கே சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று அலுவலக மொழிகள் உள்ளன. ஆகவே நான் 3 மொழிகளிலும் பேசினேன் தமிழில் ஐ.நா.வில் பேசி பதிவு செய்தேன். இங்கே தமிழர்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அவர்களின் தொகை குறைவு. இங்கே 3 மொழிகளும் தெரிய வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அனைத்து மாணவர்களுக்கும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் மூன்று மொழிகளையும் கற்பிக்கும் முயற்சியில் இருக்கிறோம். நீங்கள் தமிழில் பேசினால் எனக்கு புரியாது ஆகவே எனக்கு சந்தேகம் வரும் . நான் சிங்களத்தில் பேசினால் என்னை சந்தேகிப்பார்கள். இதற்கு சிறந்த வழி ஒருவர் மொழியை மற்றவர் கற்பதாகும் என்றார். எங்கள் மக்களிடம் இதைத்தான் சொல்லியிருக்கிறேன். இதற்கான பாதையை மக்களுக்கு காட்ட விரும்புகிறேன். சிங்கள மக்களும் தமிழ்மொழி கற்றவேண்டும் என்றார். கேள்வி: உங்களுடைய வெளிநாட்டு கொள்கை சீனாவை சார்ந்த அயலுறவுக்கொள்கை என்ற பரவலான பார்வையுள்ளது. டெல்லியை விடவும் சீனாவின் பீஜிங்கே உங்களுக்கு நெருக்கமானது அப்படிதானே? ஜனாதிபதி: இந்தியா என் உறவு, சீனா என் நண்பன், சீனாவின் உறவு நீண்டகாலமாகவே உள்ளது. எனது பிரச்சினை என்னவென்றால் எனது நாட்டை நான் அபிவிருத்தி செய்யவேண்டும். எனது மண்ணையும் எனது நாட்டையும் எனது நண்பர்களுக்கும் எனது அண்டை நாட்டுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கமாட்டேன். நான் இருக்கும் வரையிலும் அதற்கு அனுமதியளியேன். கேள்வி: சில சம்பவங்களை உதாரணமாக கூறலாம் அதிலொன்று சீன போர்க்கப்பல்களை உங்களுடைய துறைமுகத்தில் நிறுத்தி கொள்வதற்கு அனுமதியளித்துள்ளீர்கள். ஜனாதிபதி: இல்லை... அவர்கள் புறப்படும் முன்னரே நாங்கள் அதுபற்றி இந்தியாவுக்கு தெரியப்படுத்தினோம். மத்தியகிழக்கு நோக்கி அவர்கள் செல்வதாகவும் இலங்கையில் தங்கியிருந்துவிட்டு போவதாகவும் இந்திய தூதுவர்கள் ஊடாக நாம் இந்தியாவுக்கு தகவல்களை கொடுத்தோம். சீன பிரதமர் நாட்டுக்கு வந்தபோது. இலங்கையைச்சுற்ற ஏழு போர்க்கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. கேள்வி: இந்த சம்பவம் குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளதே? ஜனாதிபதி : தண்ணீர், எரிபொருள் என்பவற்றுக்கான யாரும் எந்த நாட்டுக்கும் வரலாம். போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருவது இது முதல் முறையல்ல. கேள்வி: உங்களுடைய நிர்வாகம் குறித்து மாறுப்பட்ட பார்வைகள் இந்தியாவில் உள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவந்தவர் என்று சிலர் உங்களை கருதினாலும் தமிழ்நாட்டில் நிலவும் பரவலான உணர்வலைகளை அறிவீர்கள். நீங்கள் தமிழினத்துக்கு எதிரானவர் என்பதே பொதுவான கருத்தாகும். ஜனாதிபதி : இலங்கைக்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். வதந்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன். இங்கு தமிழர்கள் எப்படி நடத்தப்படுகின்றார்கள் என்பதனை காணவேண்டும் என்றார். - See more at: http://www.tamilmirror.lk/136730#sthash.oGhA7kEF.dpuf
No comments:
Post a Comment