இது புதிசு!

இத்தளத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரைகளும் சுய ஆக்கங்களும் பதிவாகின்றன

Wednesday, December 31, 2014

வதந்திகளை நம்பவேண்டாம்: மஹிந்த பேட்டி

ன் அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்களை கேட்டுப்பாருங்கள் எம்.பிக்களை கேளுங்கள்.  என்னால் தமிழர்களுக்கு எதிராக நடக்க முடியாது.  என் உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத்தமிழர் ஒருவரை திருமணம் செய்திருக்கின்றார். மற்றுமொருவர் கண்டியைச்சேர்ந்த மலையகத்து இஸ்லாமியரை திருமணம்

Friday, December 26, 2014

ஆறாத வடுக்களையும் வலிகளையும் மட்டும் விட்டுச்சென்ற ஆழிப்பேரலை!

ழிப்பேரலை ஊருக்குள் புகுந்து ஊழித்தாண்டவம் ஆடி ஆண்டுகள் பத்து  கடந்து விட்டன. ஆனாலும் அவை ஏற்படுத்திச்சென்ற வலிகளும் வடுக்களும் இன்றும் மக்கள் மனங்களை விட்டு அகலவில்லை. 2004 டிசம்பர் 26   இதே நாளில் தேசமே ஒரு கணம் ஸ்தம்பித்துப்போனது.எங்கு பார்த்தாலும் ஒப்பாரிச் சத்தங்கள், கூக்குரல்கள், பிணக்குவியல்கள், மக்கள் மனங்களில் அதிர்ச்சி, ஏக்கம், அச்சம், அடுத்து என்ன நடக்குமோ? என்ற மிரட்சி, கரையோரப் பிரதேசத்து மக்களின் வாழ்க்கையே இருண்டு போனது. யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. எல்லோரும்

Thursday, December 25, 2014

புறக்கணிப்பு கோசம்!

னாதிபதித் தேர்தலை  தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த நாட்களில் பரவலாக முன்வைக்கப்பட்டன. இன்னமும் அந்தக் கோரிக்கைக் கோசங்கள் தொடர்கின்றன. குறிப்பாக, தமிழ் சமூக- இணைய ஊடகப் பரப்பில், ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிப்பதன் அவசியம் பற்றிய கருத்தாடல்கள் குறிப்பிட்டளவில் இடம்பெற்றுவருகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்புக் கோசம் தமிழ் மக்களிடம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த நிலையில், அதை இன்னும் அதிகப்படுத்தி வைத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அறிவிப்பு. முன்னாள்

Monday, December 22, 2014

மாட்டிக் கொண்ட மு.கா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவு இன்று, மு.கா.வின். முடிவு நாளை, முடிவின்றி மு.கா., அதி உயர் பீட கூட்டம் முடிவு, முடிவெடுக்கும் அதிகாரம் மு.கா. தலைவரிடம், மு.கா.வின் முக்கிய கூட்டம் நாளை, இது போன்ற செய்தித் தலைப்புக்கள் கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வந்த வண்ணமே இருக்கின்றன. 

ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கும்

Sunday, December 21, 2014

ஜெயிக்கப் போவது யார்? நடக்கப்போவது என்ன?

லங்கை அரசியல்வரலாற்றில் 2015 ஜனாதிபதித் தேர்தல் பல்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் நெருக்கடிகள் மிகுந்ததாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதியாக இருந்த ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்ற முன்னைய விதி நீக்கப்பட்டு ஜனாதிபதியாக இருந்த ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் பதவி வகிக்க முடியும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டு பாதை திறந்து

Thursday, December 18, 2014

பெஷாவர் தாக்குதலும் மனிதநேய ஹாஷ்டேகும்!

ஹாஷ்டேக் என்பது எத்தனை அருமையான ஆயுதம் என்பதும், அமைதிக்காக குரல் கொடுக்கவும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவும் அது எத்தனை அழகாக பயன்படும் என்பது,  இந்த வாரம் இரண்டாவது முறையாக நிருபிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவரில் பள்ளிக்குழந்தைகள் மீது நடந்த கோர தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் #இந்தியாவித்பாகிஸ்தான் ஹாஷ்டேக் (#IndiawithPakistan ) டிவிட்டரில் தொடர்ந்து முன்னிலை வகித்து மனிதநேயத்தை உரத்த குரலில் வலியுறுத்தியுள்ளது.

திரிசங்கு நிலையில் கூட்டமைப்பு

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கப்போகும் நிலைப்பாடு, என்ன என்பது தொடர்பான  கேள்விகள் இன்னமும் இருந்துவருகின்றன.  தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னிருந்தே இது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டுவருகிறது.

ஆரம்பத்தில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'இன்னமும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியான பின்னர் யோசிக்கலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிவந்தனர். தேர்தல் அறிவிப்பு வெளியான

நல்லிணக்கம் தொடர்பாக எதிரணியும் பொது உடன்பாட்டை எட்டுவது அவசியம்

 வ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது இன்றைய 

நிலைப்பாடும் நய நுட்ப வேற்றுமை கலந்ததாகும். அவர்கள் தொடர்ந்தும் எதிரணியிலேயே இருந்து வந்ததால் கடந்த பத்தாண்டு காலத்தில் அவர்கள் அரசாங்கத்தால் முற்றாகவே ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளனர்.  இதன் காரணமாக  இக் கூட்டமைப்புக்கு
( த.தே.கூ.) வாக்களித்த வாக்காளர் சமூகத்திற்கு இக் கட்சியினரால்  மிகவும் குறைந்த அளவிலேயே ஏதும் செய்யக் கூடியதாக இருந்ததனை வடக்கு, கிழக்கு கிராமங்களுக்குச் சென்று கவனிப்பவர்களுக்கு நன்கு விளங்கும். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

Tuesday, December 16, 2014

ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்தல்

முதல் முறையாக தற்போதுள்ள ஜனாதிபதி  மூன்றாம் தவணை பதவி நாடுவதனால் மட்டுமல்லாது,  இதுவே அரசியல் அமைப்பின் பதினெட்டாம் சீர்திருத்தத்திற்குப் பின்னர் நடைபெறும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் என்பதினால் 2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுகின்றது.   வாக்குரிமையானது மக்களின் அடிப்படை உரிமை மட்டுமல்லாது மக்களின்

Tuesday, December 9, 2014

வாக்குறுதி மீறலின் வரலாறு

ம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையே மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கிறது. அக்கட்சி அதனை நேரடியாக கூறாவிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என்று கூறுவதனாலும் அவ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பகிரங்கமாகவே கூறி வருவதனாலும் அவ்வாறு தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலின் போது தேற்கடிக்க வேண்டுமாயின் நடைமுறை சாத்தியமான ஒரே வழி, மைத்திரிபாலவை

Monday, December 8, 2014

ஜனாதிபதித் தேர்தலில் உயிர்பெறும் புலிகள்!

னாதிபதித் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்ட கையோடு, புலிகளுக்கு உயிரூட்டும் பிரசாரமும் முடுக்கி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது பிரிக்கப்படாத இலங்கையில் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு என்று தலைவர் இரா. சம்பந்தன் எத்தனை தடவை தான் கூறினாலும், பிரிவினை தான் கூட்டமைப்பின் நோக்கம் என்ற பிரசாரத்தினையே மூலதனமாகக் கொண்டு மகிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கப்போகும் திட்டம்

Saturday, December 6, 2014

எதிரணியின் பாய்ச்சல்!

ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஸ்யங்களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது. தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறபோது, அந்தப் போராட்டத்தை உடைத்து வெற்றி பெறும் எண்ணத்தில் கணிசமானளவு முன்னோக்கி வந்துள்ளதாக பொது எதிரணி கருதுகிறது.  
பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை சொந்த மாவட்டமான பொலனறுவையில்,

Tuesday, December 2, 2014

முதல் கோணல்!

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திடீரென தாம் எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்ததோடு, அதுவரை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமய கட்சித்தலைவர்களும் எதிர்க்கட்சிகளுக்காக பொது வேட்பாளர் ஒருவரை தேடி அலைந்த மாதுளுவாவே சோபித தேரரும் ஊடகங்களினால் மறக்கப்பட்டுவிட்டதைப் போலாகிவிட்டார்கள்.

Friday, November 28, 2014

மைத்திரியின் களமிறக்கம் டில்லியின் "உட்குத்தலா?'

லங்கை ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற உள்ளது. இத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ராஜபக்ஷவின் சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மூத்த தலைவர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுகிறார்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 13 ஆண்டுகாலம் பொதுச்செயலராக இருந்த மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஷ

Wednesday, November 26, 2014

இன்னும் விலகாத மர்மம்!

மணிவிழா கொண்டாட்டம்...
''மாவீரர்கள் ஒரு சத்திய லட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல... எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன. சத்தியத்துக்காக சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது

Tuesday, November 25, 2014

சரித்திர ரீதியாக, 3ஆவது தவணை என்பது ஆயுட்காலம்!




லகில் பலவிதப்பட்ட ஆட்சிமுறைகள் பாவனையில் உள்ளன. இவற்றில்  ஜனநாயகம், சர்வாதிகாரம், குடியாட்சி, முடியாட்சி, கம்யூனிஸம், சோஷலிஸம் என்பவை குறிப்பிடக்தக்கவை.
ஜனநாயக ஆட்சி என்னுமிடத்தில், அங்கு ஒழுங்கு தவறாத நீதித்துறை, யாவரும் நீதியின் முன் சமன், அரசாங்கம் மீதான மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு, சமத்துவம், பலரும் ஏற்றுக்கொள்ளும் சமூக பொருளாதார கட்டமைப்பு, மக்கள் ஆட்சி, பேச்சு சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் போன்றவை காணப்படும். மோசடி நிறைந்த தேர்தலை நடத்தும் பல அரசாங்கங்கள் தங்களையும் ஜனநாயக அரசாக கருதுகின்றன. தேர்தல் நடத்துவது மட்டும் ஜனநாயகம் அல்ல. தேர்தல்கள் மோசடியற்று சுதந்திரமான வாக்கெடுப்பு, வாக்குக்கள் சுதந்திரமாக எண்ணப்பட வேண்டும்.

Saturday, November 22, 2014

சோழியன் குடுமி சும்மா ஆடாது

மகிந்த அரசில் பிரதான வகி பாகம் வகித்த பிரதானிகள் சிலர் அரச
தரப்பிலிருந்து எதிரணிக்கு மாறிக்கொண்டிருக்கும் செய்திதான் நாட்டில் தற்போதைய பரபரப்பு.
இதுக்கெல்லாம் பின்னணியில் நின்று காய் நகர்த்திக்கொண்டிருக்கும் பிரதானியாக சந்திரிகா குமாரதுங்கவே உள்ளார்.

இந்தக் காய் நகர்த்தலில் இவவுக்கு என்ன லாபம்?
எதுவுமே இல்லையே! 
அப்படியானால்  இவ எதுக்கு தலைபோடுகிறா?

Friday, November 21, 2014

இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் காரணம் என்ன?

விடுதலைப் புலிகளை முற்றாகப் போரில் தோற்கடித்தன் பின்னர், சிறிலங்காவானது மிகப் பாரியளவில் நலன்களைப் பெறுகிறது. இதன்மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனாவை ஏவக்கூடிய அளவுக்குத் தனது பொருளாதாரம் மற்றும் புவியியலைக் கட்டுப்படுத்தி அவற்றில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் சிறிலங்கா இன்னமும் முன்னேற்றமடையவில்லை.

வாயை மூடிப்பேசவும்!

நோர்வேக்கு எதிரான புதிய போர் ஒன்றை மீளவும் ஆரம்பித்துவைத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

வடக்குக்கான தேசிய நெடுஞ்சாலைக்கு குருநாகலில் அடிக்கல் நாட்டிய பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதுக்காக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மீதும் முன்னாள் நோர்வே அரசாங்கம் மீதும் விசாரணைகளை நடத்த வேண்டுமென்று நோர்வே அரசாங்கத்தை அவர் கேட்டிருந்தார்.

Wednesday, November 19, 2014

ஜனாதிபதி தேர்தலும் இனவாத அரசியலும்




னாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்கனவே போட்டியிட்ட இரு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் பிரசாரங்களுக்கு கையாண்ட அணுகுமுறைகள் சிறுபான்மையினத்தவர்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை சிங்களவர்கள்  மத்தியில் தூண்டிவிடுபவையாகவே அமைந்திருந்தன.

Tuesday, November 18, 2014

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியல் பிரவேசம்?

ரஜினி- இந்த மூன்றெழுத்து தமிழகத்தில் அவ்வப்போது சுனாமி போல் மக்கள் மனதில் எழும். பிறகு அது அப்படியே எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அமுங்கிப் போகும். ஒவ்வொரு சினிமா படம் எடுக்கும் போதும் “அரசியலுக்கு வருகிறார் ரஜினி” என்ற கோஷம் கிளம்பும். பிறகு அப்படியே சப்தம் குறைந்து விடும். இதுதான் கடந்த 18 வருடங்களாக தமிழகம் கண்ட காட்சி.

Monday, November 17, 2014

அரசியல் கோமாளிகளின் கூத்து!


மீரியாபெத்த மண்சரிவில், தோட்ட காரியாலயம், பாடசாலைகள், கிராமசேவகரின் ஆவணங்கள், பிரதேச செயலகம் மூழ்கவில்லை என்பதனால் மரணித்தவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவ்வளவு சிரமமான காரியமாக இருக்காது. மரணித்தவர்களின் துல்லியமான புள்ளிவிவரங்களை முன்வைக்குமாறு மலையக தலைமைகள் ஏன் கோரவில்லை?
ரு தசாப்த காலத்துக்கு முன்னர், தேசிய அரசியல் நீரோட்டத்தையே நிர்ணயிக்கின்ற பலம்பொருந்திய சக்தியாக திகழ்ந்த மலையக கட்சிகள், தற்போது சிக்கி சின்னாபின்னமாகி, சீரழிந்து, விபசார அரசியலை நடத்திக்கொண்டிருக்கின்றன

எதிர்க் கட்சிகளின் தடுமாற்றம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடம் இருக்கிறதா என்றும் அவர், தமது தற்போதைய பதவிக் காலத்தில் நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்த நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா என்றும் இந்த இரண்டு பிரச்சினைகளைப் பற்றி அவர் உயர்நீதிமன்றத்தின் கருத்தை கோர முடியுமா என்றும் சில மாதங்களாக அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வந்த விடயங்களுக்கு

Saturday, November 15, 2014

தகவல் அறியும் உரிமை பொதுமக்களுக்கு பயனுடையதாகும்!

ஊடகங்கள் வெளியிடுகின்ற விடயங்களில் தவறுகள், குறைபாடுகள் ஏற்படும்போது வாசகர்கள் ஊடகங்களையும் அதனை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களையும் குற்றம் சுமத்துகின்றனர். அதுமட்டுமல்லாது தவறானதும் உறுதிப்படுத்தப்படாததுமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கையிடல்களை அல்லது வெளிப்படுத்தல்களை மேற்கொள்ளும் போது மக்கள் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர். 

Friday, November 14, 2014

த.தே.கூ. யாருக்கு?

திர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென்று வலுவாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இப்போது முதன்மை பெறத் தொடங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் கொண்டுள்ள வாக்கு வங்கி,

இந்தியாவின் கடமை!

இலங்கைத் தமிழர்களுக்கு  உதவ இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் என்று தமிழக தினசரிப் பத்திரிகையான"தினகரன்' நேற்று முன்தினம் வலியுறுத்தியுள்ளது. 
"இந்தியாவின் கடமை ' என்று மகுடமிட்டு அப் பத்திரிகை செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது ;

Wednesday, November 12, 2014

புண்பட்டுப்போன பண்பாட்டு விழா!


டந்த வருடம் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வடமாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது. வடமாகாண மக்களின் பெரும்பான்மை வாக்குகளில் வடக்கின் தமிழர் அரசாக வடமாகாணசபை மலர்ந்தது. இம்மாகாண சபை வந்ததன் பின்னர் வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் முதல் முறையாக கடந்த சனி, ஞாயிறு தினங்களில் (01,02.11.2014) வவுனியாவில் நடைபெற்றது. வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில்

நிறைவேற்று ஜனாதிபதி முறையை எப்படி நீக்குவது?

னாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது  வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. பெரும்பாலும் கரு ஜயசூரியவே போட்டியிடுவார் என்று ஊடகங்கள் எதிர்வு கூறுகின்றன. இப்போது கரு

Tuesday, November 11, 2014

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இன்றைய நிலையினைப் பற்றி மீளச் சிந்திப்பவர்கள் யார்?

நாட்டில் ஏற்படக் கூடிய ஏனைய விளைவுகளைக் கருத்திற் கொள்ளாத வகையில் அடுத்த வருட ஆரம்பத்திலேயே ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறலாம் என்பது மென்மேலும் உறுதியாகிக் கொண்டு வருகிறது. அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய  ரம்புக் வெல ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடக்க விருப்பதாக அறிவித்துள்ளார்.  அதுமாத்திரமன்றி  தேர்தல் நடைபெற உள்ள திகதி பற்றி தனக்குத் தெரியும் என்றும் ஆனால் அதனை வெளியிடப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். கள நிலையில்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பின் இரகசியம்!

ராஜேந்திரசோழனின் ஆயிரமாவது முடிசூடிய ஆண்டு விழாவையொட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தமிழகத்தின் 36 இடங்களில் அணிவகுப்புகளை  நடத்தி, தமிழக மக்களை தங்கள் பக்கமும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள். 

இவ்அணிவகுப்பை ஆர்.எஸ்.எஸ். மொழியில், பத சஞ்சலன் என்றும் ஆங்கிலத்தில் Route march என்றும் கூறுவார்கள்.

Monday, November 10, 2014

'ஒன் மேன் ஆர்மி' சகாயம்!

ரு மாலை நேரம்...

காற்றும் மழையும் அடித்து ஓய்ந்திருந்தது. மழை விடுவதற்கும், பள்ளிக்கூடம் முடிவதற்கும் சரியாக இருந்தது. ‘ஹே...’வென கத்தியபடி அந்த ஆரம்பப் பள்ளியில் இருந்து சிறுவர்கள் சிட்டாகப் பறந்தனர்.

ஏன் – எதற்கு விசாரணை?

னாதிபதி ஆணைக் குழுக்கள் எவையும் தமிழ் மக்களுக்கு இதுவரையில் எந்த நன்மையையும் பெற்றுத்தர வில்லை. அதற் காக அவற்றின் முன்னால், தங்கள் குறைக ளைக் கொட்டாமல் தமிழ் மக்க ளும் விடுவதில்லை. கடந்த கால ஜனாதிபதி ஆணைக்குழுக் களைப் போலவே, காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஆணைக்குழு வும் தமிழ் மக்களுக்கு ஏமாற் றத்தையே வழங்கப் போகின்றது.

Sunday, November 9, 2014

கலங்கியுள்ள அரசியல் அரங்கும் கலக்கமடைந்துள்ள அரசியல்வாதிகளும்

லங்கிக்  கிடந்த அரசியல் அரங்கு தெளிவு பெறும் வாரமாக இந்த வாரம் மாறுகிறது. வாய் மூல சமர்ப்பணங்களுக்கு வேட்டு வைத்து விட்ட மீயுயர் நீதிமன்றம் எழுத்து மூல சமர்ப்பணங்ளோடு ஜனாதிபதியால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இன்று விடையளிக்கிறது. மாலையளவிலோ அல்லது அதற்கு முன்னரோ தனது ஆலோசனையை முன்வைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்ற உயர் நீதிமன்றம் முழு அளவிலான நீதியரசர்கள் குழாமைக் கொண்டே ஆராய்வுகளை நடத்தியுள்ளதாக செய்திகள்

எந்த நைஜீரியாவுக்கு அந்தப் பெண்கள் திரும்புவார்கள்?

சிபோக் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி நள்ளிரவு துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 276 மாணவிகளை மீட்டு அழைத்துவர நைஜீரிய அரசுக்கும் போகோ ஹரம் பயங்கரவாதிகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்ற செய்தி நாடு முழுவதும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டாயா? என்று ஏராளமானோர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டனர். நாளாக நாளாக அப்படி எதுவும் நடக்கவில்லையென்றதும் ஆவல் அடங்கி வெறும் எதிர்பார்ப்பாகவும், அதுவும் தேய்ந்து காத்திருப்பாகவும், கடைசியில் விரக்தியாகவும் மாறிவிட்டது.

Saturday, November 8, 2014

காமராசர் இல்லையேல் சோனியா ஏது?

ந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, தூக்குக் கயிற்றில் தொங்கியும், சிறைக்கொடுமைகளை அனுபவித்தும் எண்ணற்ற தியாகம் செய்த தலைமுறை காமராசரோடு முடிந்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து வரும் சில முதிய தியாகிகள் நாட்டின் நிலைமையைப் பார்த்து, "இதற்காகவா போராடினோம், இதற்காகவா தியாகம் செய்தோம்' என மனம் வெதும்பி கிடக்கின்றனர். அவர்களைத் தேடுவாருமில்லை; மதிப்பாருமில்லை.

மாகாண சபைக்கு அப்பால் இப்போதைக்கு தீர்வு இல்லை

ட மாகாண சபையின் கடந்த கூட்டத்தில் சபை சரியாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை மாகாண சபையின் பிரதித் தவிசாளர் முன்வைத்துக் காரசாரமாகப் பேசியிருக்கின்றார். சில மாவட்டங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றன என்பதும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மாகாண சபை நிறைவேற்றவில்லை என்பதும் அவர் முன்வைத்த பிரதான குற்றச்சாட்டுகள். இக் குற்றச்சாட்டுகளுக்கு மாகாண சபை நிர்வாகம் நேரடியாக எந்தப் பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தாத போதிலும் மாகாண சபைக்கு நெருக்கமானவர்களிடமிருந்தும் மாகாண சபை நிர்வாகத்தின் ஆதரவாளர்களிடமிருந்தும் சில பிரதிபலிப்புகள் வெளிவந்தன. தமிழ் மக்கள் மத்தியில் பிராந்திய வேறுபாட்டை வளர்ப்பதற்கு

Friday, November 7, 2014

மீண்டும் வந்த சீன ட்ராகன்

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிகள், கொழும்புத் துறைமுகத்துக்கு அடிக்கடி வரத்தொடங்கியுள்ள விவகாரம், இராஜதந்திர மட்டங்களில் சர்ச்சையாக உருவெடுத்துவருகிறது.

சீன நீர்மூழ்கிகள் அடிக்கடி கொழும்புத் துறைமுகத்துக்கு வரத் தொடங்கியுள்ளதை, இந்தியா கவலையுடனும் கலக்கத்துடனும் பார்க்கத்தொடங்கியுள்ளது. 

இதை வழக்கத்துக்கு மாறானதொரு செயற்பாடாகவே இந்தியா

Thursday, November 6, 2014

நியாயமான கேள்வி

வடகொரியா வசம் அணு ஆயுதம் இருப்பது தொடர்பாக வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. 

வடகிழக்கு ஆசியாவில் அமைதிச் சூழல் என்கிற வகையில், அமெரிக்காவின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், வழக்கமான பிடிவாதத்திலிருந்து அது சற்றேனும் இறங்கி வந்தால்தான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஏன் இந்த அவல வாழ்வு இன்னமும் தொடர்கிறது?

போர் முடிந்து 5 வருடங்களுக்குள் மக்களை மீள்குடியேற்றி, வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு இப்போ துரிதமாக வடக்கில் அபிவிருத்தி நடைபெறுகிறது என அவ்வப் போது அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனால் யுத்தம் நடைபெற்ற போது தோற்றம் பெற்ற நலன்புரி நிலையங்கள் சில தற்போதும் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனு. இவையே வடக்கில் மீள்குடியேற்றம் முழுமை பெறவில்லை என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்த துன்பத்தை எடுத்துக்காட்டும் அகதி முகாமாக வவுனியா, சிதம்பரபுரம் அகதிகள் முகாம் காணப்படுகிறது. 

Wednesday, November 5, 2014

துறவறம் போகும் மு.கா.!

தவி அரசியலைக் கைவிடப்போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான அம்பாறை, பொத்துவில் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய போதே அந்தக் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேற்கண்ட முடிவை வெளியிட்டிருக்கின்றார். 

Tuesday, November 4, 2014

இராணுவமயமாகின்றது மீரியபெத்த

மீரியபெத்த மண்சரிவு மீண்டும் ஒரு சுனாமியை இலங்கையின் மலையகப் பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. அலை அலையாய் மக்கள் திரண்டு வருவதையும், நாடு முழுவதும் மக்கள் உதவிக் கரம் நீட்டுவதையும் காணும்போது மனித நேயம் சாகவில்லை என்ற நம்பிக்கை நமக்கு புத்துணர்வைத் தருகின்றது.
நாங்கள் இவ்விடத்திற்கு வியாழனன்று சென்றிருந்தபோது ஒரு சில அமைச்சர்களும் வந்திருந்தனர். இப்போது எதைப் பார்க்க வருகிறார்கள்

கவனிப்பாரற்ற நிலையில் அல்லல்படும் மலையக மக்கள்!

இயற்கை அனர்த்தத்தால் பாரிய மண் சரிவில் சிக்கி பெருந்தோட்ட தமிழ் மக்கள், தமிழ்த் தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர்.பல பிள்ளைகள் தாய் தந்தை இருவரையுமே இழந்துமுள்ளனர். உறவுகளை, உடைமைகளை இழந்து மன வேதனையுடன் அல்லல்படும் பல அவலங்களுக்கு முகம் கொடுத்துள்ள கொஸ்லாந்தை மக்களுக்கு உரிய உதவிகள் தடையின்றி தாமதமின்றிக் கிடைப்பதைப் பொறுப்புடன்

அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் – தடுமாற்றமும்

டந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய 
விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது.
இதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது.

சாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது!

 4 ஆண்டு தண்டனையும் 4 பேரும்!
சாயம் போவது புதுத்துணியில் மட்டுமல்ல; சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் அவ்வப்போது நடப்பதுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவின் விவகாரத்திலும் பலர் அம்பலப்பட்டுப் போனார்கள். அதில் நான்கு பேரைப் பற்றி மட்டும் இங்கே:

Monday, November 3, 2014

வரலாற்றை மறைக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி!


''திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; 'திராவிடன்’ என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது.''
 ''ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், 'இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு’ என்று பேசுகின்றன. ஆகவே, நேரு

Sunday, November 2, 2014

தடை நீக்கம்: அரசுக்கு சாதகம்

மிழீழ  விடுதலை புலிகள் அமைப்பு, 2009ஆம் ஆண்டு  போரில் தோல்வியுற்றதன் பின்னர் பெற்ற மிகப் பெரும் வெற்றி, அவ்அமைப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை நீக்குமாறு, ஐரோப்பிய நீதிமன்றம் (ECJ) கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தீர்ப்பொன்றின் மூலம் பிறப்பித்த பணிப்புரையே எனலாம்.

இலங்கை - இந்திய ஒருநாள் ஆட்டம்!

லங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் இன்று பகல்-இரவு ஆட்டமாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, வீரர்களின் சம்பள ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விளையாடிக்கொண்டிருந்த கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்திவிட்டு சென்றது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் 

Saturday, November 1, 2014

3000ஆம் ஆண்டு கொஸ்லாந்தை-மீரியபெத்தயில்...

2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை சுமார் 7.30 மணியளவில் இந்தப் பகுதியில் இருந்த கிராமம், அதோ அங்கே தெரிகின்ற மலையின் ஒரு பகுதி சரிந்ததால் மண்ணுள் புதையுண்டதாம், அதில் 300 பேருக்கு மேற்பட்ட எமது தமிழ் மூதாதையர்கள் உயிரிழந்து விட்டனராம்."

Thursday, October 30, 2014

பேருகலை மலையின் 'சம்ஹாரம்'


புதையுண்டதால் மனங்கள், ரணங்களாய்... இங்கே வதையுண்ட நாங்கள், நடை பிணங்களாய் ஆனோம். பல தடைகள் மீறியே பெத்த உயிர்கள்...மீரியாபெத்த மண்ணுக்குள் சங்கமாகிவிட்டன. அந்த உறவுகளுக்கு,  கண்ணீர் காணிக்கைகள் என்ற கண்ணீரஞ்சலி பதாகைகளுக்கு வடுவாகிவிட்டது கொஸ்லாந்த, மீரியாபெத்த பேரழிவு.

தேசிய விளையாட்டு : மேற்கின் ஆதிக்கமும் வடக்கின் பின்னடைவும்



லங்கையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் மாகாணங்களுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 40ஆவது அத்தியாயம் அண்மையில் வட மத்திய மாகாணத்தின் தலைநகராக விளங்கும் அனுராதபுரத்தில் நடைபெற்றுமுடிந்துள்ளது.இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் வீர-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Wednesday, October 29, 2014

இறைவனை படைக்கும் மனிதர்கள்!



றைவனைத்தேடி நாம் செல்வதுதான் பொதுவாக மக்களின் வழக்கம். ஆனால் அதற்கு மாறாக நாம் செல்லும் சாலைகளில் நமக்காக காத்திருக்கிறார்கள் கடவுளர்கள்.
வாசுகியின் மீது திருமால், குழலுடன் கண்ணன் , பழனிமலை முருகன், பிரமாண்ட பிள்ளையார்
என அத்தனை கடவுளர்களும் விதவிதமான வடிவங்களில் நிறங்களில் நம் இல்லத்துக்கு வந்துவிடும் ஆவலோடு சாலையோரங்களில்

Monday, October 27, 2014

ஜனாதிபதித் தேர்தலும் தனிநபர் ஆளுமையும்

னாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதை எதிர்த்து முன்னாள் பிரதம நீதியரசரும் மக்கள் விடுதலை முன்னணியும் சட்டப் பிரச்சினை கிளப்புவதையிட்டு பிரதான அரசியல் கட்சிகளும் பெருமளவு மக்களும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. பொது வேட்பாளர் என்ற கதை இப்போது

Sunday, October 26, 2014

வரவு செலவுத் திட்டம் மக்களுக்கா ... தேர்தலுக்கா ...?

தேர்தல்களை  உரிய முறையாக நடத்துங்கள்,  உரிய காலத்துக்குள் நடத்துங்கள் என்கிற கோரிக்கைகளை காணக் கூடிய அரசியல் மற்றும் தேர்தல்கள் கட்டமைப்பில் தேர்தலை நடத்த வேண்டாம் . தேர்தலை பிரகடனம் செய்வது சட்ட  விரோதமானது எனும் புதுமையான களநிலைமையை கண்டவண்ணமுள்ளது இலங்கை. இந்தப் பின்னணியில் தங்களது

Thursday, October 23, 2014

வடக்கு முதலமைச்சரின் கவனத்திற்கு...

விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும் வேறு பல காரணிகளாலும் இன்றைய வாழ்வு சவால் நிறைந்ததாக உள்ளது. இச்சவாலினைச் சமாளிக்க மாணவர்களின் ஆங்கில அறிவு மேம்படுத்தப்படல் அவசியம் என்பதை மனச்சாட்சியுள்ள கற்றறிந்தோர் ஏற்றுக் கொள்வர்.
இன்று பலர் ஆங்கில மொழியாற்றல் இன்மையால் தங்களின்

Saturday, October 11, 2014

தமிழகத்தில் பாரதீய ஜனதாவை பலப்படுத்த ரஜினியை இழுப்பதில் மோடி ஆர்வம்

மிழகத்தில் பாரதீய ஜனதாவை பலப்படுத்த ரஜினியை இழுப்பதில் மோடி ஆர்வமாக இருப்பதாகவும் அவரது உத்தரவுப்படியே அகில இந்திய தலைவர் அமித்ஷா ரஜினியுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அமித்ஷா  ரஜினிகாந்த் சந்திப்பு தொடர்பாக எதுவும் தெரியாது என்று மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை மழுப்பலாக பதில் அளித்துள்ளார். 

Monday, September 29, 2014

மூக்குடைக்கப் போய் மூக்குடைபட்ட ரீவி எம்.பி.!


குறிஞ்சி மக்களிடம் பிச்சை எடுத்து பாரை ஆளும் மன்றத்துள் எதிரணியாய் நுழைந்து ஆளும் குடும்பத்துக்கு ஜால்ரா போடுபவரும் - ஒரு வசனத்தைத் தொடங்கினால் முழுமையாக முடிக்கத் தெரியாத தனக்கு, தானே புகழ் ஆரம் சூட்டுபவரும் - முழக்கத்துக்கு முன்னர் வரும் வெளிச்சத்துக்கு சக வாதிகளை பொதுநலம் என்ற பெயரில் தன்னலம் கருதி இழுத்து வருபவருமான ம(மி)திப்புக்குரியவர், 

Monday, September 22, 2014

ஸ்கொட்லாந்தின் அனுபவத்திலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை...

ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் பின்னணியில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஸ்கொட்ஷ் மக்களின் முடிவு எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தமது தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்குரிய ஓர் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இங்கு முக்கியம்.